உங்கள் வீட்டு டைல்ஸ் பழசு மாதிரி இருக்கா... இதை ட்ரை பண்ணி பாருங்க, தரையே புதுசு மாதிரி ஜொலிக்கும்!

Tile Grout Remove Tips
Tile Grout Remove Tips
Published on

நமது வீடுகளில் உள்ள டைல்ஸ் தரைகள் சில வருடங்களில் பார்க்கவே ரொம்ப பழசானது போல மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் அந்த டைல்ஸ்களுக்கு நடுவே இருக்கும் க்ரவுட் எனப்படும் சிமெண்ட் பூச்சுதான். அதில் பாசி படிந்தோ, விரிசல் விட்டோ அசிங்கமாக காட்சியளிக்கும். 

இதை சரி செய்ய நாம் பெரிய அளவில் செலவு செய்து ஆட்களை கூப்பிட வேண்டியதில்லை. ஒரு சின்ன மதிய வேளையில், கொஞ்சம் பொறுமையாக வேலை செய்தால் நாமே இதை சுலபமாக நீக்கிவிட்டு புதிய லுக்கை கொடுக்க முடியும். அதை எப்படி பாதுகாப்பாக செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஏன் இதை மாற்ற வேண்டும்?

ஏன் இதை மாற்ற வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பழைய பூச்சில் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு பூஞ்சை காளான் வந்திருக்கலாம், அல்லது உங்கள் வீட்டின் இன்டீரியருக்கு ஏற்றவாறு வேறு நிறம் தேவைப்படலாம். சில சமயம் அந்த பூச்சு உதிர்ந்து போய் மோசமான நிலையில் கூட இருக்கலாம். ஒட்டுப்போடுவது அந்த அளவுக்கு செட் ஆகாது என்பதால், மொத்தமாக மாற்றுவதே பெஸ்ட்.

இதற்கு நமக்கு சில உபகரணங்கள் தேவைப்படும். முக்கியமாக கண்களுக்கு சேஃப்டி கிளாஸ், ஆஸிலேட்டிங் டூல், கார்பைடு டிப் உள்ள டூல், கொஞ்சம் டல்லான கத்தி மற்றும் ஷாப் வேக்யூம் ஆகியவை கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.

க்ரவுட்டை அகற்றும் விதம்: முதலில் பாதுகாப்புக்காக கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆஸிலேட்டிங் டூலில் மேசன்ரி பிளேட்டை மாட்டி, டைல்ஸ் இடுக்குகளில் நேராகவோ அல்லது செங்குத்தாகவோ வைத்து மெதுவாக செலுத்துங்கள். ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம், மெஷினே வேலையை பார்த்துக் கொள்ளும். அது ஈஸியாக பழைய பூச்சை உடைத்து எடுக்கும். 

நேராக வைத்து எடுத்த பின்பு, கொஞ்சம் சாய்வாக வைத்து விளிம்புகளில் உள்ளதையும் எடுக்க வேண்டும். உங்கள் கைகள் வலிக்காமல் இருக்க ஒரு டூல் பாக்ஸ் மீது கையை சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளலாம். ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அழுத்தினாலும் டைல்ஸ் வீணாகிவிடும் என்பதால் கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:
ஏடிஎம் மெஷினை திருட சென்ற பலே திருடர்கள்! திருடியது எதை?
Tile Grout Remove Tips

மெஷினை பயன்படுத்திய பிறகு, அந்த கார்பைடு டிப் டூலை வைத்து கொஞ்சம் அழுத்தமாக ஒட்டியிருக்கும் பிடிவாதமான பகுதிகளை சுரண்டி எடுக்கலாம். டைல்ஸ் ஓரங்கள் உடைந்து விடாமல் ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். மீதமுள்ள சின்னச் சின்ன துண்டுகளை எடுக்க ஒரு பழைய, கத்தியை பயன்படுத்துங்கள். நல்ல ஷார்ப்பான கத்தியை பயன்படுத்தினால் டைல்ஸ் கீறல் விழ வாய்ப்புள்ளது.

சில எக்ஸ்ட்ரா டிப்ஸ்!

வேலை செய்யும் போதே அடிக்கடி வேக்யூம் கிளீனரை வைத்து அந்த தூசிகளை உறிஞ்சி எடுப்பது மிகவும் நல்லது. இதனால் நாம் என்ன செய்கிறோம் என்பது தெளிவாக தெரியும். சில நேரங்களில் டைல்ஸ் மேற்பரப்பிலும் இந்த க்ரவுட் காய்ந்து ஒட்டியிருக்கும். அதை இரும்பினால் சுரண்டக் கூடாது. பிளாஸ்டிக் ஸ்கிராப்பர் அல்லது பழைய கிரெடிட் கார்டு வைத்து லேசாக சிறிய சிறிய ஸ்ட்ரோக்குகளாக சுரண்டிவிட்டு, ஒரு வெட் ஸ்பாஞ்ச் வைத்து துடைத்தாலே போதும்.

நீங்கள் பேட்டரியில் இயங்கும் ஆஸிலேட்டிங் டூல் பயன்படுத்தினால், தூசி பறக்காமல் இருக்க லேசாக தண்ணீர் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். ஆனால் கரண்டில் இயங்கும் மெஷினுக்கு இதை கண்டிப்பாக செய்யக் கூடாது. அதே போல வேக்யூமில் ஹெப்பா ஃபில்டர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அப்போதுதான் வீடு முழுவதும் தூசி பரவாது.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிராண்ட் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டுமா? இதோ 6 வெற்றிக் சூத்திரங்கள்!
Tile Grout Remove Tips

டேமேஜ் ஆக வாய்ப்புள்ள இடங்களில் பெயிண்டர்ஸ் டேப் ஒட்டிக்கொள்வது புத்திசாலித்தனம். முழுவதுமாக க்ரவுட்டை எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சிறிய அளவு ஆழத்திற்கு எடுத்தாலே புதிய பூச்சு நன்றாக செட் ஆகிவிடும்.

இந்த சின்ன வேலையை முடித்த பிறகு உங்கள் வீட்டு தரை எப்படி புத்தம்புதிதாக ஜொலிக்கிறது என்பதை நீங்களே பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com