Cycling
Cycling

"சைக்கிள ஓட்டுங்க; ஆயுச கூட்டுங்க" - ஆய்வு கூறும் செய்தி!

Published on

'அது ஒரு அழகிய கனா காலம்' நண்பர்களுடன் பள்ளிக்கு சைக்கிள் ஓட்டி சென்ற காலத்தைத்தான் கூறுகிறேன். பள்ளி புத்தகங்கள், மத்திய உணவு என அனைத்தையும் கட்டிக் கொண்டு சைக்கிள் ரேஸ் வைத்து நண்பர்களுடன் போட்டி போட்டு பள்ளியை அடைந்த காலங்கள் இப்போது மாறிவிட்டன. சிறியவர்களாக  இருக்கும் போது சைக்கிள் பயன்படுத்துகின்றனர். வளர்ந்த பின்பு வாகனத்திலும் வளர்ச்சி எதிர் பார்த்து பைக், கார் என அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகின்றனர். நாம் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்றார் போல் எண்ணங்களும் மாற்றம் அடைவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

ஆனால் என்ன, பல காலமாக ஓட்டிய சைக்கிள் ஓரத்தில் நின்றாலும், நாம் பக்கத்து கடைக்கு கூட பைக், காரை தேர்ந்தெடுத்து பழகிவிட்டோம். முன்பை விட சைக்கிள் ஓட்டும் நபர்கள் குறைவே.

பலர் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நண்மைகளை அறிந்தவர்கள். அதனால், தினமும் உடற்பயிற்சியாக சைக்கிள் ஓட்டுகின்றனர். நாம் சைக்கிள் ஓட்டுவது நம் உடலிற்கு அன்றாட தேவையாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து பிரிட்டன் ஆய்வாளர்கள் கூட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.   

பிரிட்டன் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு

16 வயது முதல் 74 வயதுக்குட்பட்ட 82 ஆயிரம் பேரை 18 ஆண்டுகளாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்காணித்து, ஆய்வு ஒன்று நடத்தி உள்ளனர். இந்த ஆய்வு குறித்த தகவல்கள், பி.எம்.ஜி பப்ளிக் ஹெல்த் (BMJ Public Health) பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் அதிகம் பேசுவது ஏன்?
Cycling
cycling
cycling

அதில் கூறியதாவது:

"சைக்கிள் பயன்படுத்துபவருக்கு, மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் 47 சதவீதம் குறைவாக உள்ளது. அதேபோல், புற்றுநோயால் உயிரிழப்பது 51 சதவீதமும், இருதய கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 24 சதவீதமும், மனநல கோளாறு ஏற்படுவது 20 சதவீதமும் குறைவாக உள்ளது."

எனவே சைக்கிள் பயன்படுத்துவதை அதிகரித்தால், ஆயுள் நாட்கள் அதிகரிக்கும் என்பதை அறிய முடிகிறது. முடிந்த அளவு உங்கள் தினசரி நாளில் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனெனில், மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில், நீங்கள் சைக்கிளை அதிகமாக பயன்படுத்தினால் நோய்களில் இருந்து உங்களை விடுவித்து, ஆரோக்கியமாக வாழ முடியும். 

logo
Kalki Online
kalkionline.com