Role of betel nut in home remedies
Role of betel nut in home remedieshttps://www.maalaimalar.com

வீட்டு வைத்தியத்தில் வெற்றிலையின் பங்கு!

Published on

டலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு வெற்றிலை மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. மிகவும் சுலபமாகவும் வீட்டுக்கு அருகிலேயே எளிதாகக் கிடைக்கும் வெற்றிலையைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

* மன அழுத்தம் காரணமாக தாங்க முடியாத தலைவலி ஏற்படும்போது வெற்றிலையை அரைத்து அந்த விழுதை நெற்றியில் பற்று போட, சிறிது நேரத்தில் தலைவலி சரியாகிவிடும்.

* வெற்றிலைச் சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து பெரியவர்கள் குடிக்க, கபம் குறையும்.

* வெற்றிலையில் கடுகு எண்ணெய் தடவி லேசான தணலில் அல்லது விளக்கில் சூடு காட்டி, இதமான சூட்டில், குழந்தை மார்பில் மெதுவாக நாலைந்து முறை ஒற்றி எடுக்க சளி, மூச்சிரைப்பு, இருமல் குணமாகும்.

* வெற்றிலையின் சாறில் கொஞ்சம் மிளகுத் தூள் போட்டு கஷாயம் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்தால் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர்.

* பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத நிலையில், வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி இலேசாக வாட்டி, இரவில் மார்பில் வைத்துக் கட்டிக்கொண்டால் மறுநாள் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதையும் படியுங்கள்:
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!
Role of betel nut in home remedies

* பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொண்டு வலி எடுக்கும்போது வெற்றிலையை வெறும் வாணலியில் வதக்கி பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் வைத்துக் கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.

* ஒரு டீஸ்பூன் வெற்றிலைச் சாறும், ஒரு டீஸ்பூன் தேனும் கலந்து இரண்டு வேளை தினமும் அருந்த, உடல் பலவீனம் நீங்கும். நரம்பு தளர்ச்சியும் சரியாகும்.

* உண்ட உணவு செரிக்க, வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு சேர்த்து போட, நல்ல ஜீரணத்தைத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com