வீட்டுக்கு Room Freshener வாங்கப் போறீங்களா? இந்த 5 விஷயங்களில் கவனமா இருங்க!

Room Freshener buying Tips.
Room Freshener buying Tips.
Published on

நம் வீட்டில் இனிமையான மற்றும் அழகான சூழலை உருவாக்குவது நமது ஒட்டு மொத்த நல்வாழ்வுக்கும் அவசியம். எனவே ரூம் பிரஷ்னரைப் பயன்படுத்துவது மூலம் நமது சூழலை மேம்படுத்தலாம். சந்தையில் வெவ்வேறு விதமான ரூம் பிரஷ்னர்கள் இருக்கின்றன. அதில் சரியானதை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம். எனவே இந்தப் பதிவில் ரூம் பிரஷ்னர் வாங்கும்போது எதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். 

  1. வாசனை: ஒரு ரூம் பிரஷ்னரின் வாசனைதான் ஒரு சிறப்பான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ரூம் பிரஷ்னர் தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்குப் பிடித்த மற்றும் அறையில் சிறப்பாக உணரச் செய்யும் வாசனையைத் தேர்வு செய்யுங்கள். லாவண்டர் மற்றும் மல்லிகை போன்ற மலர்களின் வாசனை மனநிலையை சீராக்கி, அமைதியான சூழலை உருவாக்குகின்றன. அதே போல எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வாசனைகள் புத்துணர்ச்சி மற்றும் உற்சாக உணர்வை அளிக்கின்றன.  

  2. பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்: அடுத்ததாக, ரூம் பிரெஷ்னர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் கவனம் செலுத்துங்கள். இயற்கையான அல்லது கரிமப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ப்ராடக்டுகளைத் தேர்வு செய்யவும். ஏனெனில் அவற்றில் பொதுவாகவே தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் குறைவாகவே இருக்கும். பார்மால்டிஹைட் மற்றும் பிற ஆவியாகும் கரிம சேர்மங்கள் உள்ள ரூம் பிரசனர்களைத் தவிர்க்கவும். ஏனெனில், ரசாயனங்கள் உட்புற காற்றின் தரத்தை மோசமாகி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

  3. நீடித்த நறுமணம் மற்றும் பாதுகாப்பு: ரூம் பிரஷ்னர்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதன் ஆயுட்காலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளுங்கள். சில தயாரிப்புகள் ஸ்பிரே வடிவில் வருகின்றன. அவை உடனடி புத்துணர்ச்சியை வழங்கினாலும், விரைவாக அதன் மணத்தை இழக்கிறது. எனவே உங்கள் அறையின் அளவைப் பொறுத்து நீடித்த நறுமணம் வழங்கக்கூடிய ரூம் பிரஷ்னர்களைத் தேர்வு செய்யுங்கள். 

  4. பயன்பாடு மற்றும் பராமரிப்பு: எப்போதுமே பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பராமரிப்பு குறைவாகவும் இருக்கும் தயாரிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது. சில தானியங்கி தயாரிப்புகள் பயன்படுத்துவது மிகவும் எளிது. மேலும் சிலரும் பிரஷ்னர்களை அவ்வப்போது ரீபில் செய்து கொள்ளும்படி வரும். இவற்றை ஒருமுறை வாங்கிவிட்டால் மீண்டும் மீண்டும் நறுமண திரவத்தை ரீஃபில் செய்து கொள்ளலாம். 

  5. விலை மற்றும் தரம்: ரூம் பிரெஷ்னர்கள் வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகள் அதன் விலை மற்றும் தரம்தான். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் கருத்தில் கொண்டு, அத்துடன் அதன் விலை மற்றும் தரம் எப்படி இருக்கிறது என ஒப்பிட்டுப் பார்த்து எதை வாங்கலாம் என முடிவு செய்யுங்கள். சந்தையில் மிகவும் மலிவாகக் கிடைக்கும் பொருட்கள் நீண்ட காலம் வராது. அதேபோல நீங்கள் விரும்பும் நறுமணத்தை வழங்காது. எனவே பிரீமியம் பொருட்களை நீங்கள் தேர்வு செய்யும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே உங்களுக்குக் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
Pot Water Benefits: மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 
Room Freshener buying Tips.

இனி எப்போதுமே இந்த 5 விஷயங்களின் அடிப்படையில் ரூம் பிரஷ்னர்களைத் தேர்வு செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com