தண்ணீர் ஊற்றிக் கழுவத் தேவையில்லை… கிருமிகளை நொடியில் அழிக்கும் 'மேஜிக்' திரவம்!

Cleaning Tips
Cleaning Tips
Published on

சமையலறை அதிகப்படியான வேலை நடக்கும் அந்த இடத்தில்தான் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் குடிகொண்டிருக்கும். வழக்கமாக நாம் சோப்பு அல்லது வினிகர் கலந்த நீரை வைத்துச் சுத்தம் செய்வோம். 

ஆனால், சில பிசுபிசுப்பான கறைகள் போகாது; கழுவிய பிறகும் நீர் திட்டுக்கள் அப்படியே இருக்கும். இதற்குத் தீர்வு தேடி அதிக விலை கொடுத்து ‘கிளீனிங் லிக்விட்’ வாங்கத் தேவையில்லை. உங்கள் முதலுதவிப் பெட்டியில் இருக்கும் 'ரப்பிங் ஆல்கஹால்' (Rubbing Alcohol) ஒன்றே போதும். 

ஏன் ரப்பிங் ஆல்கஹால்? 

பொதுவாகத் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யும்போது, அது காய்வதற்கு நேரம் எடுக்கும். சில சமயம் காய்ந்த பிறகும் துடைத்த தடம் தெரியும். ஆனால், ரப்பிங் ஆல்கஹால் அப்படியல்ல. இது ஒரு சிறந்த கரைப்பான். எப்பேர்ப்பட்ட பிசுபிசுப்பான எண்ணெய் கறையையும் இது கரைத்துவிடும். மிக முக்கியமாக, இது காற்றிலேயே ஆவியாகிவிடும் தன்மை கொண்டது. எனவே, துடைத்த சில விநாடிகளில் அந்த இடம் காய்ந்து, எந்தத் தடையுமே இல்லாமல் கண்ணாடி போல மின்னும்.

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

  1. மைக்ரோவேவ் ஓவன் பட்டன்கள், ஃப்ரிட்ஜ் கைப்பிடிகள், மற்றும் கிச்சனில் உள்ள லைட் சுவிட்சுகள் ஆகியவைதான் அதிக கிருமிகள் தங்கும் இடங்கள். இவற்றின் மீது தண்ணீரை ஊற்ற முடியாது. ஒரு சிறிய பஞ்சில் ரப்பிங் ஆல்கஹாலை நனைத்துத் துடைத்தால், அழுக்கு நீங்குவதோடு கிருமிகளும் அழியும். டச் ஸ்கிரீன் உள்ள நவீன சாதனங்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது.

  2. சிங்க் மற்றும் குழாய்களில் உப்புத் தண்ணீர் பட்டு வெள்ளை வெள்ளையாகத் திட்டுக்கள் இருக்கும். ரப்பிங் ஆல்கஹாலைத் துணியில் நனைத்துத் துடைத்தால், அந்தத் திட்டுக்கள் மறைந்து குழாய்கள் புதுசு போல ஜொலிக்கும். கழுவ வேண்டிய அவசியமே இல்லை.

  3. பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கட்டிங் போர்டுகளில் காய்கறி வெட்டும்போது, கத்தி பட்ட இடங்களில் அழுக்கு சேரும். அதன் மீது ஆல்கஹாலை ஸ்ப்ரே செய்து, ஒரு நிமிடம் கழித்துத் துடைத்தால் போதும். ஆனால், மரப்பலகைக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.

எங்குப் பயன்படுத்தக் கூடாது? 

இது மிகவும் சக்திவாய்ந்த திரவம் என்பதால், கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் கற்களால் ஆன மேடைகளில் இதைப் பயன்படுத்தக் கூடாது. இது அந்த கற்களின் மேல் உள்ள பாலிஷ் மற்றும் சீலண்ட்டை உரித்து எடுத்துவிடும். எனவே, டைல்ஸ் மற்றும் மற்ற இடங்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
Cleaning Tips

வீடு துடைக்கப் பயன்படுத்தும் விலை உயர்ந்த ரசாயனங்களை விட, ரப்பிங் ஆல்கஹால் மலிவானது மற்றும் மிகவும் பயனுள்ளது. இது வெறும் அழுக்கை மட்டும் நீக்காமல், கிருமிகளையும் அழிப்பதால் இரட்டைப் பயன் கிடைக்கிறது.

 எண்ணெய் பிசுக்கு நிறைந்த உங்கள் சமையலறை மேடை அல்லது அடுப்பைச் சுத்தம் செய்ய, அடுத்த முறை இந்த ரப்பிங் ஆல்கஹாலை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வேலை நேரம் பாதியாகக் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com