

விறகடுப்பில் தண்ணீரை சூடு செய்து குளித்த காலம் போய்... இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் தண்ணீரை சூடு பண்ணுவதற்கு பல்வேறு மின்னணு சாதனங்களும், பொருள்களும் வந்துள்ளன. பெரும்பாலும் பாத்ரூம்களில் சுடு தண்ணீருக்காக நாம் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துவோம். எல்லா வாட்டர் ஹீட்டர்களும் பாதுகாப்பானதா? என்று கூறமுடியாது. போலியான ஒரு சில பொருட்களும் சந்தையில் விற்கப்படுகின்றன. எனவே, நாம்தான் உஷாராக இதுபோன்ற வாட்டர் ஹீட்டர்களை வாங்காமல் இருப்பது நல்லது. நல்ல தரமுள்ள வாட்டர் ஹீட்டர்களை வாங்குவது தான் முக்கியம்.
வாட்டர் ஹீட்டர்களில் இரண்டு வகை உள்ளது, ஒன்று இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர். மற்றொன்று ஸ்டோரேஜ் டைப் வாட்டர் ஹீட்டர் என்று இருக்கிறது. இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்பது ஸ்விட்ச் போட்ட அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே தண்ணீர் ஆனது சூடாகிவிடும். இதுவே ஸ்டோரேஜ் டைப் என்றால் தண்ணி சூடாக கால் மணி நேரம் அதற்கும் மேலாகும். இப்போது, இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்ததுபோல் இன்ஸ்டன்ட் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
சந்தையில் பிரபலமாக அறிமுகமாகி விற்கப்படும் இரண்டு வாட்டர் ஹீட்டர்களான இன்ஸ்டன்ட் ஸ்டோரேஜ் V Guard zio மற்றும் Havells instanio என்ற இரண்டு நிறுவனங்களின் வாட்டர் ஹீட்டரை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
HAVELLS VS V- GUARD; WATER HEATER.
இந்த இரண்டு எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்களும் 3 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. இதனுடைய சந்தை மதிப்பானது, ஹவல்ஸ் வாட்டர் ஹீட்டர் 3600-இக்கும், வீ-கார்டு வாட்டர் ஹீட்டர் 3000- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரண்டும் 3 கிலோ வாட் வெப்பத்தை உள்வாங்கும் திறனை கொண்டுள்ளது. அதேபோல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாதுகாப்புக்கு கவசத்தை கொண்டுள்ளன. வாட்டர் ஹீட்டருக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசமும் (guarantee). அதேபோல் உள்ளிருக்கும் டேங்குக்கு ஐந்து வருட கால அவகாசமும் (guarantee) இருக்கிறது. இரண்டும் ரஸ்ட் ப்ரூப்பாக இருக்கிறது. அதாவது துருப்பிடிக்காமல் இருக்கும். இதனால் வாட்டர் ஹீட்டர் ஆனது நீண்ட காலம் உழைக்கும்.
ஹவல்ஸ் வாட்டர் ஹீட்டர் 57°c வெப்பநிலையை அடையும் பொழுது, தானாகவே அதற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திக்கொள்கின்றன.
அதேபோல் வி கார்ட் வாட்டர் ஹீட்டர் 55°c வெப்பநிலையை அடையும் பொழுது, தானாகவே அதற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திக் கொள்கின்றன.
இரண்டு வாட்டர் ஹீட்டர்களும் மின்சாரத்தை தேவைக்கேற்பவே எடுத்துக் கொள்கின்றன. நமது பயன்பாட்டை பொருத்து அதன் ஆயுட்காலமானது நீடிக்கிறது. அதேபோல் மின்சாரமும் உயர்கின்றன.
பட்ஜெட் ஃபிரண்ட்லியாக ஒரு பாதுகாப்பான வாட்டர் ஹீட்டர் என்றால் அது வீகார்டு முதன்மை தேர்வாகும். அதேபோல் கொஞ்சம் காசு கூட போனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் ஹாவல்ஸ் வாட்டர் ஹீட்டர் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் இதில் கூடுதல் அம்சங்கள் இருக்கின்றன. கூடுதலாக இந்த வாட்டர் ஹீட்டரோடு சேர்த்து பைப் குழாயும் கொடுக்கப்படுகிறது.
இந்த இரண்டு வாட்டர் ஹீட்டர்களும் மிகவும் பாதுகாப்பானவையே. உங்களின் வசதிக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வது சிறந்ததுதான். அதேபோல் இந்த இரண்டையும் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே இதன் ஆயுட்காலமானது நீடிக்கும்.