மழைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டிய அவசியம் ஒருபக்கம் இருந்தாலும், வண்டியில் வெளியே செல்லும்போது நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது என்பது மிகவும் முக்கியமாகும். மழைக்காலத்தில் வண்டி ஓட்டிச் செல்வது சவாலாகவும் சிரமமாகவும் இருக்கும். எனவே, நம்முடைய பாதுகாப்பிற்காக மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மழைக்காலத்தில் கார் அல்லது பைக் என எதை எடுத்துச் சென்றாலும், முதலில் அதனுடைய கன்டீஷன் எப்படியுள்ளது என்பதை முழுவதுமாக சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும். Accelerator, brake போன்றவை சரியாக வேலை செய்கிறதா? என்பதை நன்றாக தெரிந்துக்கொண்ட பிறகே வண்டியை எடுக்க வேண்டும்.
2. மழைக்காலத்தில் சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்களிடமிருந்து சரியான அளவு இடைவேளையை கடைப்பிடிப்பது விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
3. மழைக்காலத்தில் கூட்ட நெரிச்சலான பாதைகளை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு மாற்றுவழியைத் தேர்வு செய்வது சிறந்தது. மேலும், வண்டி ஒட்டி செல்லும்போது, குண்டு குழிகள் அதிகமாக இருக்கும் சாலையைத் தவிர்ப்பதும் சிறந்தது.
4. மிதமான வேகத்தில் சாலையில் வண்டியை ஓட்டிச் செல்வது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் அதிக வேகத்தில் வண்டியை செலுத்துவதால் வண்டி கவிழ்ந்துப்போகவோ அல்லது விபத்துக்குள்ளாகவோ வாய்ப்புகள் உண்டு.
5. கன மழையின்போது வண்டியில் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகப்பு விளக்கு என்று சொல்லப்படும் ஹெட்லைட்டை எரியவிட்டுக் கொண்டே செல்வது நல்லது. மழையில் சாலையில் உள்ள Road safety signs போன்றவற்றை தெளிவாகப் பார்ப்பதற்கு இது உதவுவதோடு எதிரில் வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு நாம் வருவதைத் தெரிவிக்கவும் உதவுகிறது. இதனால் விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.
6. சாலையின் வளைவுகளில் வேகமாகத் திரும்புவது, பிரேக்கை வேகமாகப் போடுவது போன்றவற்றை பெரும்பாலும் தவிர்ப்பதால் வண்டி சறுக்குவது போன்ற ஆபத்தில் இருந்து காக்கும்.
7. வண்டியில் மிகவும் அவசியமாக First aid kid வைத்திருக்க வேண்டியது நல்லதாகும். மேலும், மழைக்காலத்தில் வெளியே செல்லும்போது ரெயின் கோட், பூட்ஸ் போன்ற உடைகளை அணிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது சிறந்தது. எனவே, மழைக்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.