காலை எழுந்ததுமே சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Foods to eat in the morning
Foods to eat in the morning
Published on

காலையில் எழுந்ததுமே சாப்பிடக்கூடிய உணவுகள்தான் நம் ஒட்டுமொத்தமான ஆரோக்கியத்திற்குமே காரணமாக அமையும். காலை எழுந்ததுமே டீ, காபி குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. காலையில் ஆரோக்கியமான உணவாக நம் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடலுக்கு எனர்ஜி கொடுக்கக்கூடிய உணவுகள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Honey with warm water: காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்துக் குடிப்பது மிகவும் நல்லது. தேனில் இருக்கும் வைட்டமின், மினரல், என்சைம்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளான Toxins ஐ வெளியேற்றும். 20 கிராம் தேனில் 8.4 கிராம் Fructose மற்றும் 6.9 கிராம் Glucose இருப்பதால் காலையில் உடலுக்குத் தேவையான சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது.

2. Soaked Almonds: பாதாமில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்புகளும் இருக்கின்றன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவு பாதாம். 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் இருக்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டியது அவசியம். பாதாமின் தோலில் இருக்கும் Tannin என்னும் மூலப்பொருள் பாதாமின் சத்துக்கள் உடலில் போய் சேருவதைத் தடுக்கிறது. எனவே, கட்டாயம் ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும்.

3. Papaya: பழங்களிலே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்தது பப்பாளி பழமாகும். குடல் இயக்கத்தை சீராக்கவும், உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும். வயிறு உப்புசம், மலச்சிக்கல் வராமலும் தடுக்கிறது. மேலும், இதில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4. Watermelon: தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், அதிக அளவில் Electrolytes உள்ளது. இது கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியிலிருந்து தடுக்கும். இது உடலுக்கு நல்ல எனர்ஜியையும் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
Foods to eat in the morning

5. Sprouted green gram: பச்சைப்பயறை அப்படியே சாப்பிடுவதை விட. முளைவிட்ட பிறகு அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். பச்சைப்பயறில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதிலிருக்கும் புரதம் சீரான தசை வளர்ச்சிக்கும், செல்கள் சேதமடையாமலும் பாதுகாப்பதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறுவதற்கு உதவுகிறது. எனவே, காலையில் இனி டீ, காபி எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com