Salt Spoon: உப்பு சுவைத் தரும் மின்சார சால்ட் ஸ்பூன்!

Salt Spoon
Salt Spoon

உப்பு சுவைத் தரக்கூடிய மின்சார ஸ்பூனை ஜப்பான் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இது பலருக்கும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

ஜப்பானியர்கள் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் போனவர்கள். பொதுவாக நாம் உணவில் உப்பு சேர்ப்பதை மறந்துவிடுவது வழக்கம். சிறிய அளவு உப்புப் பயன்படுத்தவில்லை என்றால், முழு உணவையும் சாப்பிடவே இயலாது. உப்பு, மற்ற அனைத்து சுவைகளையும் சமநிலைப் படுத்த உதவும் ஒன்றாகும். அவற்றைக் கருத்தில் கொண்டுதான், ஜப்பானிய நிறுவனம் ஒன்று உணவில் உப்புப் போட மறந்தாலும், உப்பு சுவையுடன் எப்படி சாப்பிட முடியும் என்ற யோசனையில் இறங்கினார்கள்.

அந்த யோசனையின் விளைவாகத்தான், உப்பு ஸ்பூன் கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானிய நிறுவனமான கிரின் ஹோல்டிங்க்ஸ்தான் இந்த வித்தியாசமான மின்சார ஸ்பூனை கண்டுபிடித்துள்ளது. உணவில் உப்பு சேர்க்க மறந்துவிட்டாலும், இந்த ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிட்டால், உப்பு சுவை கிடைக்கும்.

இந்த ஸ்பூனை பயன்படுத்துவதால், தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய உப்பினை, மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 60 கிராம் எடை கொண்ட  இந்த மின்சார ஸ்பூனானது,  ரீ சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது உப்பு இல்லாமலேயே, நாக்கிற்கு உப்பு சுவையை கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இதனால், உப்பு இல்லாமலேயே உப்பு சுவைக் கிட்டும். உப்பு எடுத்துக்கொள்ளாததன் மூலம் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் சுமார் 200 மின்சார உப்பு ஸ்பூன்களை மட்டும் ஆன்லைன் மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் விலை $127 ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ 10,500 ஆகும். அதன்பின்னர் ஜூன் மாதத்தில் விற்பனையாளர்களிடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் 10 லட்சம் ஸ்பூன்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?
Salt Spoon

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருவது ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கின்றது என்றாலும், மறுபக்கம் பல நன்மைகளையும் தருகின்றன. ஏனெனில், இந்த ஸ்பூன் இன்னும் 10 வருடங்களில் பெரிய அளவில் புகழ்பெற்றுவிட்டது என்றால், பிறகு உப்பு எதற்கு? உப்பு பயன்பாடே இல்லையென்றால், அதனால் வரும் நோய்களும் வராதல்லவா?

என்ன இருந்தாலும் ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தாயா… என்பதுபோல, அவ்வப்போது நல்ல ப்ராடக்ட்டுகளையும் இறக்கிட்டே இருக்கான்யா…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com