கூகுளில் இந்த 3 விஷயங்களைத் தேடினால் ஜெயில் தண்டனை நிச்சயம்!

Searching for these 3 things on Google will definitely land you in jail
Searching for these 3 things on Google will definitely land you in jail
Published on

னைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் கூகுள் ஒரு அங்கமாகிவிட்டது.  யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைக் கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால் உடனடியாக கூகுளில் தேடுவார். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

தேடுபொரியான கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். அதாவது சிறைக்கு செல்லும் சூழ்நிலையையும் இது ஏற்படலாம். ஆதலால் கூகுளில் சில தேடுவதைத் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. வெடிகுண்டு தயாரிக்கும் தகவலைத் தேடுவது: பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதால் வெடிகுண்டு தயாரிக்கும் தகவலைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும். யாராவது ஒருவர் கூகுளில் இது பற்றித் தேடினால் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் உங்கள் கம்ப்யூட்டர் சென்று விடும். அத்தகைய சூழ்நிலையில் உங்களை தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்துவர். தேவைப்படும் பட்சத்தில் உங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால் வெடிகுண்டு தயாரிக்கும் தகவல் தேடுவதை மனதில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் 9 யோகா முறைகள்!
Searching for these 3 things on Google will definitely land you in jail

2. குழந்தைகளின் ஆபாசப் படங்கள்: ஆபாச தளங்களைப் பார்ப்பதே தவறு. அதிலும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை ஒருபோதும் தேடக்கூடாது. ஏனெனில், இந்தியாவில் இது தொடர்பாக POCSO சட்டம் 2012, 14-ன் கீழ், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் அரசு உங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிக அளவில் வாய்ப்புகள் உண்டு. இந்த குற்றத்திற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதால் பொதுவாக ஆபாச தளங்களைப் பார்ப்பதை அடியோடு மறந்து விடுங்கள்.

3. கருக்கலைப்பு: கூகுளில் தேடக் கூடாத மூன்றாவது விஷயம் கருக்கலைப்பு பற்றியது. கருக்கலைப்பு என்று கூகுளில் தேடுவது சட்டப்படி குற்றமாகும். ஏனென்றால், இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது என்பது சட்ட விரோதமானது ஆகும்.

இதையும் படியுங்கள்:
வழக்கமான பாலை விட ஆர்கானிக் பாலில் ஊட்டச்சத்து ஏன் அதிகம் தெரியுமா?
Searching for these 3 things on Google will definitely land you in jail

மேற்கூறிய மூன்று விஷயங்களுமே இந்தியாவில் சட்ட விரோதமாகக் கருதப்படுவதால், அதை கூகுளில் தேடுவது உங்களை தண்டனைக்கு உள்ளாக்கும்  என்பதால் இவற்றை அடியோடு மறந்து விடுவது அனைவருக்குமே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com