வீட்டை அழகாக்க புது பொருட்கள் தேவையில்லை... பாதி விலையில் கிடைக்கும் இந்த 7 செகண்ட் ஹேண்ட் பொருட்கள் போதும்!

Secondhand Things For home
Secondhand Things For home
Published on

சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதை நமக்கு பிடித்த மாதிரி அழகாக அலங்கரிக்க வேண்டும் என்பது பலரின் மாபெரும் கனவாக இருக்கும். ஆனால் அதற்காக வீட்டில் உள்ள ஒவ்வொரு சின்னப் பொருளையும் பெரிய கடைகளில் போய் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து புதிதாகத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. 

கொஞ்சம் பொறுமையாகத் தேடினால், பயன் படுத்தப்பட்ட பழைய பொருட்களை விற்கும் சந்தைகளில் நமக்கு பல அற்புதமான பொக்கிஷங்கள் கிடைக்கும். அப்படி உங்களின் பணத்தை பெரிய அளவில் மிச்சப்படுத்தும் வகையில், செகண்ட் ஹேண்டில் தாராளமாக வாங்கக்கூடிய 7 முக்கியமான வீட்டு உபயோகப் பொருட்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பழைய மார்க்கெட்டில் கிடைக்கும் 7 பொக்கிஷங்கள்!

1. மரச் சாமான்கள்: இப்போதெல்லாம் கடைகளில் விற்கும் புதிய மர டேபிள்கள் மற்றும் நாற்காலிகள் சீக்கிரமே உடைந்துவிடுகின்றன. ஆனால் பழைய மார்க்கெட்டில் கிடைக்கும் பழங்கால தேக்கு மர பர்னிச்சர்கள் பல தலைமுறைகளுக்கு உழைக்கும் தன்மை கொண்டவை. கொஞ்சம் பாலிஷ் போட்டால் போதும், அவை பார்ப்பதற்கு ரொம்பவே ராயலாக மாறிவிடும்.

2. போட்டோ பிரேம்கள்: வீட்டின் சுவர்களை அலங்கரிக்கப் பயன்படும் பெரிய கண்ணாடிகள் மற்றும் போட்டோ பிரேம்களை புதிதாக வாங்குவது சுத்தமான பண விரயம். செகண்ட் ஹேண்ட் கடைகளில் மிக நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட பழங்கால பிரேம்கள் மிகக் குறைந்த விலையில் ஈசியாகக் கிடைக்கும்.

3. உடற்பயிற்சி உபகரணங்கள்: புத்தாண்டு சபதம் எடுத்துவிட்டு பலரும் ட்ரெட்மில் அல்லது சைக்கிளிங் மெஷின்களை ஆசையாக வாங்குவார்கள். ஆனால் ஒரு வாரத்திலேயே அதைத் துணி காயப்போடப் பயன்படுத்திவிட்டு, பாதி விலைக்கு ஆன்லைனில் விற்றுவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருட்களை நாம் மிக சுலபமாகப் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
துபாயில் உலகின் முதல் 'தங்கத் தெரு' விரைவில் ஆரம்பம்..! சாலைகளும் தங்கமா?
Secondhand Things For home

4. அலங்காரப் பொருட்கள்: வரவேற்பறையில் வைக்கும் பித்தளை சிலைகள், பழங்கால கடிகாரங்கள் மற்றும் சிறிய ஜாடிகள் போன்றவற்றை பழைய கடைகளில் தேடி வாங்குவது ஒரு தனி சுகம். இவை உங்கள் வீட்டிற்கு ஒரு கிளாசிக் லுக்கை மிகக் குறைந்த செலவில் கொடுத்து அசத்திவிடும்.

5. தோட்டக்கலை தொட்டிகள்: செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள் அதற்கான தொட்டிகளைப் புதிதாகத் தான் வாங்க வேண்டும் என எந்த ரூல்ஸும் கிடையாது. பழைய பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டிகளை வாங்கி, அதன் மேல் கொஞ்சம் பெயிண்ட் அடித்தாலே அவை பார்ப்பதற்குப் புதிதுபோல மாறிவிடும்.

6. பீங்கான் பாத்திரங்கள்: வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்தப் பயன்படும் பீங்கான் தட்டுகள் மற்றும் காபி கப்புகளை செகண்ட் ஹேண்டில் தேடிப் பாருங்கள். நாம் எதிர்பார்க்காத பல ஆச்சரியமான மற்றும் வித்தியாசமான டிசைன்கள் அங்கே மிக மலிவான விலையில் கிடைக்கும்.

7. புத்தகங்கள்: படிக்கப் பயன்படுத்தும் புத்தகங்களை புதிதாக வாங்குவதை விட, பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதுதான் எப்போதும் சிறந்தது. அதோடு அந்தப் புத்தகங்களை அடுக்கி வைக்கும் மர அலமாரிகளும் பழைய மார்க்கெட்டில் ரொம்பவே உறுதியாகக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பல கோடிகளைப் பெற்றுத் தந்த பழைய டிராக்டர் புகைப்படம்... சாத்தியமானது எப்படி?
Secondhand Things For home

பழைய பொருட்களை வாங்குவது கௌரவக் குறைச்சல் கிடையாது. அது உங்களின் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த பழக்கமும் கூட. பழைய பொருட்களை வாங்கி உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப அதைச் சற்றே மாற்றி அமைத்து வீட்டில் வைக்கும்போது கிடைக்கும் அந்த மனநிறைவே தனிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com