இனி நீங்களும் ஒரு சமையல் கில்லாடிதான்! இந்த சீக்ரெட் டிப்ஸ் மட்டும் தெரிஞ்சா போதும்.

Kitchen tips
Kitchen tips
Published on

சமையல் கலையில் தேர்ச்சி பெற பெரிய படிப்பு எதுவும் தேவையில்லை. சில சின்னச்சின்ன நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டாலே போதும். சாதாரண உணவைக் கூட அசாதாரண சுவைக்குக் கொண்டு செல்லக்கூடிய அத்தகைய பாட்டி காலத்து ரகசியங்களையும், புத்திசாலித்தனமான சமையலறை ரகசியங்களையும் இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். 

காலை உணவை கலையாக மாற்றுங்கள்!

தினமும் செய்யும் இட்லி, தோசை பஞ்சு போல மெத்தென்று வர வேண்டுமா? அடுத்த முறை உளுந்து அரைக்கும்போது, சாதாரண நீருக்குப் பதிலாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்ந்த நீரை ஊற்றி அரைத்துப் பாருங்கள். கிரைண்டர் சூடாகாமல், மாவு புளிக்காமல், அதிக அளவில் பொங்கி வரும். 

இட்லியும் பூப்போல மென்மையாக இருக்கும். ஹோட்டலில் செய்வது போல பூரி புசுபுசுவென உப்பி வர, மாவு பிசையும்போது வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி நெய் சேர்த்துக் கொண்டால் போதும். கோதுமை தோசை செய்பவர்கள், மாவில் கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால், அதன் சுவையே தனி ரகம்தான்.

அன்றாட சமையலுக்கான  சில யோசனைகள்!

  • சில நேரங்களில், நாம் எவ்வளவு கவனமாகச் சமைத்தாலும் குழம்பில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிடும். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். அந்தக் குழம்பை மீண்டும் சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தூவி, சிறிது நெய் சேர்த்துக் கிளறினால், உப்பு காரம் சமநிலைக்கு வந்துவிடும். 

  • கெட்டியாக இருக்க வேண்டிய சாம்பார் நீர்த்துப் போய்விட்டால், வெறும் தண்ணீரை ஊற்றுவதற்குப் பதிலாக, வறுத்த மிளகு-சீரகப் பொடியை உப்புடன் வெந்நீரில் கலந்து சேர்த்தால், சுவையும் மணமும் மாறாமல் கெட்டிப்படும். 

  • காய்கறிகளை வாங்கி வந்தவுடன், ஒரு கூடையில் போட்டு, அதன் மீது ஒரு ஈரத் துணியைப் போர்த்தி வைத்தால், பல நாட்கள் வரை வாடாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  • அல்வா நீர்த்துப் போய்விட்டால், சிறிதளவு சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால் போதும், அல்வா சரியான பதத்திற்கு வந்துவிடும். 

  • குலாப் ஜாமூன் உருண்டைகள் எண்ணெயில் பிரிந்து போகாமல் இருக்க, மாவை தண்ணீருக்குப் பதில் பால் ஊற்றிப் பிசையுங்கள். 

  • ஜாங்கிரி சுடும்போது, உளுந்து மாவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால், அது உடையாமல் அழகான வடிவில் வரும். 

  • லட்டுக்கான பூந்தி முத்து முத்தாக உதிர, கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்ப்பதுதான் ரகசியம்.

இதையும் படியுங்கள்:
அல்வா: இனிப்பு மட்டுமல்ல, ஒரு கலாச்சார அடையாளம்!
Kitchen tips

ஒரே மாதிரியான இனிப்புகளைச் செய்து சலித்துவிட்டதா? சில புதுமைகளைப் புகுத்திப் பாருங்கள். 

தேங்காய் பர்பி செய்யும்போது, கலவையுடன் ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்தால், அதன் சுவை அடுத்த கட்டத்திற்குச் செல்லும். கேசரி செய்யும்போது, ரவையுடன் சிறிது பால்கோவாவையும், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழங்களையும் சேர்த்தால், அது ராயல் கேசரியாக மாறிவிடும். மைசூர்பாகு செய்யும்போது, கடலை மாவுடன் முந்திரிப் பருப்பைப் பொடித்துச் சேர்ப்பது, அதற்கு ஒரு தனித்துவமான சுவையையும் மணத்தையும் கொடுக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்தும்போது, அவை உங்கள் சமையலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com