

நம்ம வீட்ல, அதிலும் குறிப்பா கிச்சன்ல, நான்-வெஜ் சமைச்சோம்னா, அந்த கவுச்சி வாசனை வீடு முழுக்க அடிக்கும். சிங்க், கவுண்டர் டாப்னு எல்லா இடத்துலயும் அந்த வாசனை தங்கி, வீட்டுக்குள்ள நுழையும்போதே ஒரு மாதிரி இருக்கும். இதுக்காகக் கடையில காசு கொடுத்து ஏர் ஃப்ரெஷ்னர் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வச்சே வீட்டை கமகமன்னு வாசனை ஆக்கலாம். அது எப்படின்னு வாங்க பார்க்கலாம்.
சமையல் எல்லாம் முடிஞ்சதும், கடைசியா ஒரு பழைய கடாய் இல்லைன்னா பாத்திரத்தை எடுத்துக்கோங்க. அதுல தண்ணி ஊத்தி, உங்ககிட்ட இருக்கிற கம்ஃபர்ட் அல்லது டெட்டால் கொஞ்சம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. அப்படி கொதிக்கும்போது வர்ற அந்த ஆவி, வீடு முழுக்கப் பரவி ஒரு நல்ல வாசனையைக் கொடுக்கும்.
அந்தச் சூடான தண்ணியை அப்படியே ஜிங்க்ல ஊத்துனீங்கன்னா, சிங்க்ல இருக்கிற கவுச்சி வாசனையும் போயிடும். மீதி இருக்கிற தண்ணியை ஆற வச்சு, ஒரு ஸ்ப்ரே பாட்டில்ல ஊத்தி வச்சுக்கோங்க. இதை கிச்சன் மேடை, டைல்ஸ், ஸ்டவ் மேலனு எல்லா இடத்துலயும் ஸ்ப்ரே பண்ணித் துடைக்கலாம். இதோட வாசனைக்குக் கரப்பான் பூச்சி, பல்லித் தொல்லை கூட இருக்காது.
குக்கர்ல மட்டன், சிக்கன்னு சமைச்சா, எவ்வளவுதான் தேய்ச்சாலும் அந்த வாசனை போகவே போகாது. இதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. குக்கர் மூடியில இருக்கிற கேஸ்கட்டை கழட்டிட்டு, ஒரு நியூஸ் பேப்பரையோ இல்ல சாதாரண பேப்பரையோ பத்த வச்சு, குக்கர்க்குள்ள போட்டுடுங்க.
பேப்பர் நல்லா எரிஞ்சு சாம்பல் ஆனதும், உடனே குக்கரை மூடி வச்சிடுங்க. அந்தப் புகை, குக்கர்க்குள்ள இருக்கிற எல்லா கெட்ட வாசனையையும் எடுத்துடும். இதுக்கப்புறம் நீங்க குக்கரை கழுவிப் பாருங்க, ஒரு துளி கூட நான்-வெஜ் வாசனை இருக்காது.
தண்ணியைக் கொதிக்க வைக்க நேரம் இல்லைன்னா, இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க. ஒரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் கம்ஃபர்ட் எடுத்துக்கோங்க. அதுல சின்னச் சின்ன பஞ்சு உருண்டைகளையோ இல்ல டிஷ்யூ பேப்பரையோ நனைச்சு எடுத்துக்கோங்க.
இந்த பஞ்சை ஒரு செல்லோ டேப் போட்டு உங்க கிச்சன் டைல்ஸ்லயோ, ஹால்லயோ, பாத்ரூம் டைல்ஸ்லயோ ஒட்டி வச்சிடுங்க. ரெண்டு நாளைக்கு வீடு முழுக்க கமகமன்னு வாசனை இருந்துகிட்டே இருக்கும்.
நம்ம வீட்ல ஹோட்டல்ல இருந்து வாங்குற பிளாஸ்டிக் டப்பாக்கள், ஐஸ்கிரீம் பாக்ஸ்னு நிறைய இருக்கும். மூடி இல்லாத ஐஸ்கிரீம் பாக்ஸை, விம் பார் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கப் பயன்படுத்தலாம். காளான் வாங்குற பாக்ஸ்ல, ஷாம்பு, கம்ஃபர்ட் பாக்கெட்டுகளை அடுக்கி வச்சுக்கலாம்.
ஹோட்டல் பார்சல் டப்பாக்களை ரெண்டா வெட்டி ஒட்டி, நீங்க ஒரு அழகான பென் ஸ்டாண்டா மாத்திக்கலாம். அதுல ஸ்பூன், கத்திரிக்கோல், லைட்டர்னு கிச்சன் பொருட்களைப் போட்டு வச்சுக்கலாம்.
இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.