சிங்கத்தை கனவில் கண்டால்...?!

ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் எதிர்கால வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு மறைக்கப்பட்ட செய்தி இருப்பதாக அறிவியல் கூறுகிறது.
Seeing a Lion in Dream
Seeing a Lion in Dream
Published on

நாம் அனைவரும் தூங்கும் போது கனவு காண்கிறோம். கனவுகள் பொதுவாக அனைவருக்கும் வரும், அவ்வளவு ஏன் விலங்குகளுக்கு கூட கனவு வருவதாக அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பலரும் தூக்கத்தில் இருந்து விழித்ததும் கனவுகளை மறந்து விடுகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் காலை நேரம் வரை சிறிது நினைவிருக்கும், அந்த நாள் கடந்து விட்டால் முற்றிலும் மறந்து போகும்.

சில நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வரும். ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் எதிர்கால வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு மறைக்கப்பட்ட செய்தி இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

பொதுவாக ஆழ்மனதின் எண்ணங்கள் மற்றும் நிறைவேறாத ஆசைகள் கனவுகளில் வருவதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில் கனவுகளில் பல நேரம் கற்பனைக்கு எட்டாத காட்சிகள் பல வருகின்றன.

ஆழ்மனதில் நினைக்காத விஷயங்கள் தான் கனவுகளில் வருகின்றன. கனவுகளில் வரும் காட்சிகளுக்கு பலன் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் மற்றும் பெரியவர்கள் கூறுவார்கள். கனவுகளில் நாம் பெரும்பாலும் சிங்கம், புலி, யானை, நாய், ஊர்வன, பறவைகள் வரை பார்த்திருப்போம்.

வெற்றிக்கான அடையாளம்:

கனவில் விலங்குகளைப் பார்ப்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் சில விஷயங்களை உணர்த்துவதாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் கனவில் சிங்கம் வந்தால் அது வெற்றிக்கான அடையாளமாக இருக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். சிங்கம் கனவில் வருவது மகிழ்ச்சியான வாழ்வின் தொடக்கமாக இருக்கும். வன ராஜாவான சிங்கம் ஒருவரது கனவில் தோன்றினால் அவருக்கு எதிர்காலத்தில் நல்ல அதிகாரம் கிடைக்கும். அவர் ஊழியராக இருந்தால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அவரது நிலை உயரும். சிங்கம் வலிமை மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சிங்கத்தை கனவில் கண்ட நபர் விரைவில் தனது எதிரிகளை வெல்வார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கனவு பலன்: பாம்பு கனவுகள்… தோல் நிறம் சொல்லும் ரகசியம்!
Seeing a Lion in Dream

பதவி உயர்வு:

சிங்கத்தை கனவில் பார்ப்பதால் ஒருவருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். தொழில் செய்யும் நபர்களுக்கு அதில் லாபம் அதிகரிக்கும், மேலும் புதிய தொழில் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். சிங்கத்தை கனவில் காண்பது மங்களரமான விஷயமாகவும் கருதப்படுகிறது. சிலரின் திருமண முயற்சிகள் வெற்றி பெறும் என்பதையும் குறிக்கிறது.

காதல் மற்றும் குடும்பம்:

ஒருவரது கனவில் ஜோடி சிங்கங்களை கண்டால் அவரது காதல் வெற்றி பெறக் கூடும். திருமணமான ஒருவருக்கு மனைவியுடன் மகிழ்ச்சிகரமான நாட்கள் வரக்கூடும், இல்லற வாழ்க்கையும் செழிக்கும். கூட்டத்தோடு சிங்கங்களை கனவில் கண்டால் அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் சில நிகழ்ச்சிகள் வரலாம். உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

அதனால் சிங்கத்தை கனவில் கண்டால் பயப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருக்கவும்!

இதையும் படியுங்கள்:
நாம் ஏன் கனவு காண்கிறோம்? கனவுகள் பலிக்குமா?
Seeing a Lion in Dream

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com