

நமது வீட்டை எவ்வளவு தான் சுத்தமாகப் பராமரித்தாலும், பாத்ரூம் சுத்தம் செய்வது என்பது பலருக்கும் கொஞ்சம் சவாலான வேலை தான். அதிலும் குறிப்பாக, நாம் தினமும் குளிக்கும் ஷவரில் தண்ணீர் வரும் துளைகளைப் பல நேரங்களில் நாம் கவனிக்கவே மாட்டோம். உற்றுப் பார்த்தால் அங்கே ஒரு லேசான பிங்க் நிறத்தில் கறை படிந்திருக்கும்.
இது சாதாரணமான அழுக்கு கிடையாது, காற்றில் பரவும் பாக்டீரியாக்களால் உருவாகும் ஒரு ஆபத்தான பூஞ்சை. ஈரம் மற்றும் சோப்பு நுரை அதிகம் தங்கும் இடங்களில் இது ரொம்பவே ஈஸியாக வளர ஆரம்பித்துவிடும். இதை எப்படி ரொம்ப சிம்பிளாக வினிகர் வைத்து சுத்தம் செய்வது மற்றும் மீண்டும் வராமல் தடுப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிங்க் நிற பூஞ்சையால் வரும் ஆபத்துகள்!
பார்ப்பதற்கு ஏதோ கலர் பெயிண்ட் கறை போலத் தெரிந்தாலும், இது ஷவரில் உள்ள சின்ன சின்ன துளைகளை முழுமையாக அடைத்து ஒரு பெரிய தொல்லையைக் கொடுக்கும். இதனால் தண்ணீர் சீராக வராமல் பிரஷர் குறைந்துவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால், ஷவரில் உள்ள மெட்டல் டிசைன் முற்றிலும் வீணாகி துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பாக்டீரியாக்கள் காற்றில் கலந்து தண்ணீர் வழியாக நமது உடலில் படும்போது, சென்சிடிவான கண்கள் மற்றும் திறந்த காயங்களில் பெரிய அளவிலான இன்ஃபெக்ஷனை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
தினசரி மற்றும் வாராந்திர பராமரிப்பு!
இந்த பூஞ்சையை ஆரம்பத்திலேயே ஒழிக்க ஒரு சூப்பரான வழியை எக்ஸ்பெர்ட்ஸ் பரிந்துரைக்கிறார்கள். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் மற்றும் பாதி அளவு வெள்ளை வினிகர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த கலவையை ஷவர் மற்றும் அதைச் சுற்றியுள்ள டைல்ஸ்களில் நன்றாக ஸ்ப்ரே செய்து விட வேண்டும்.
அதன் பிறகு சுத்தமான சுடுதண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு, ஒரு காய்ந்த காட்டன் துணியை வைத்து துளி கூட ஈரம் இல்லாமல் துடைப்பது முக்கியம். குளித்து முடித்த பிறகு பாத்ரூம் கதவை அல்லது ஜன்னலை லேசாகத் திறந்து வைத்தால் உள்ளே இருக்கும் ஈரம் சீக்கிரமாக காய்ந்து பூஞ்சை உருவாவது தடுக்கப்படும்.
மாதத்திற்கு ஒருமுறை டீப் கிளீனிங்!
இந்த பிங்க் கறையை வேரோடு முழுமையாக நீக்க மாதத்திற்கு ஒரு முறை டீப் கிளீன் செய்வது கட்டாயம். உங்களின் ஷவரை கழற்ற முடியவில்லை என்றால் கவலை வேண்டாம், ஒரு உறுதியான பிளாஸ்டிக் கவரில் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையை சரிபாதியாக ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த கவரை அப்படியே ஷவரில் மாட்டி ஒரு ரப்பர் பேண்ட் வைத்து டைட்டாகக் கட்டிவிட வேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிட்டு கவரை எடுத்துவிடலாம். பின்னர் பழைய டூத் பிரஷ் ஒன்றை வைத்துத் துளைகளைச் சுற்றி மெதுவாகத் தேய்க்க வேண்டும். கடைசியாக உள்ளே இருக்கும் அழுக்குகள் வெளியேற, சூடான தண்ணீரை ஷவரில் கொஞ்ச நேரம் போர்ஸாகத் திறந்து விட வேண்டும்.
மீண்டும் வராமல் இருக்க சில ஈஸி டிப்ஸ்!
பாத்ரூமில் எப்போதுமே ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது தான் இந்த பூஞ்சையை தடுப்பதற்கான மிகச் சிறந்த பிரம்மாஸ்திரம். குளித்து முடித்தவுடன் எக்ஸாஸ்ட் ஃபேனை ஆன் செய்து வைப்பது காற்றில் உள்ள ஈரத்தை முற்றிலுமாக வெளியேற்ற உதவும்.
அதே போல சுவர்கள், கதவு மற்றும் கண்ணாடிகளில் உள்ள தண்ணீரை ஒரு வைப்பர் கொண்டு அடிக்கடி துடைத்து விடுவது நல்ல பழக்கம். பாத்ரூமில் உள்ள பிளாஸ்டிக் ஷவர் ஸ்கிரீன் அல்லது துணிகளைச் சில வாரங்களுக்கு ஒருமுறை தவறாமல் துவைத்துச் சுத்தமாக மாற்றுங்கள்.
அதிக செலவு இல்லாமல், எந்த ஒரு கடினமான கெமிக்கலும் பயன்படுத்தாமல் இந்த சிம்பிளான ட்ரிக்கை ஃபாலோ செய்து உங்களின் ஷவரை எப்போதும் பளிச்சென்று சுத்தமாகப் பராமரியுங்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here