
கிஷோர் சுபத்ரா நடித்துள்ள மெல்லிசை படத்தை திரவ் இயக்கி உள்ளார். ராஜன் (கிஷோர் ) ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அதே பள்ளியில் இவரது மனைவி வித்யா (சுபத்ரா) கணித ஆசிரியராக பணி. இவரது மகளும், மகனும் அதே பள்ளியில் படிக்கிறார்கள். இவரது மகளுக்கு தந்தை டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பாட வேண்டும் என்று ஆசை. மகளின் வற்புறுத்தலால் ராஜன் பாட ஒத்து கொள்கிறார் . நிகழ்ச்சியின் முதல் சுற்றில் வெற்றி பெறுகிறார். இந்த வெற்றி ஒரு போதையாக மாற ஸ்கூல் பணியில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார். இதனால் இவருக்கு வேலை பறி போகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இறுதி சுற்று போட்டியில் தோல்வி அடைகிறார். வீட்டில் மகனால் சில பிரச்சனைகள் . இறுதியில் ராஜன் என்ன ஆனார் என்று சொல்கிறது மெல்லிசை.
ஒரு சிறு குடும்பத்தில் உள்ள அன்பின் பகிர்தலையும், அரவணைப்பு தரும் ஆனந்தம் இரண்டையும் சொல்ல முயன்று உள்ளது இந்த படம் . ஆனால் இதற்கான காட்சிகள் சரியாக அமையாததால் இந்த உணர்வுகள் நமக்கு சரியாக கிடைக்கவில்லை .
குடுபத்திற்கும் இடையே உள்ள கோபம் கலந்த அன்பை சொல்லும் படமாக உள்ளது உள்ளது மெல்லிசை . இதை சொல்ல சுவாரசியமான காட்சிகளை தந்திருந்தால் மெல்லிசை பார்ப்பதற்கு இனிமையாக பீல் குட் படமாக இருந்திருக்கும் .
கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவரின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக வந்துள்ளது லாக் டவுன் திரைப்படம்.
2020 ஆம் ஆண்டின் ஒரு நாள்... அனுபமா ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார். அங்கே தோழியின் வற்புறுத்தலின் காரணமாக மது அருந்துகிறார். சில நாட்கள் கழித்து அனுபமா கர்ப்பமாகிறார். எந்த தவறுமே செய்யாத தனக்கு இது எப்படி சாத்தியம்? என்று யோசிக்கிறார். மருத்துவர்கள் பெற்றோரின் அனுமதி இன்றி கருவை கலைக்க மறுத்து விடுகிறார்கள். கோவிட் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்த படுகிறது. இந்த சூழ்நிலையில் அனுபமா என்ன செய்தார்? இந்த கர்ப்பதிற்கு யார் காரணம்? என்று இந்த லாக் டவுன் பதில் தருகிறது.
இந்த படத்தை AR ஜீவா இயக்கி உள்ளார். படத்தின் இரண்டாவது பகுதி ஒரு திரில்லர் படத்தை பார்க்கும் அனுபவத்தை தருகிறது. இந்த அனுபவத்திற்குப் எடிட்டிங் முக்கிய பங்கு செய்துள்ளது. எல்லாம் சரி ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கிறது. தன் வீட்டில் இருக்கும் பெண் கர்ப்பமாக இருப்பதை அம்மவாலும், பாட்டியாலும் கண்டு பிடிக்க முடியாதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் இந்த படம் பெண்களுக்கு மறை முகமாக அறிவுரை செய்யும் படமா? என நாம் பார்க்கும் போது சந்தேகம் எழுகிறது. இந்த கேள்விகளை தாண்டி அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு, திரைக்கதையின் பரபரப்பு இதற்காக இந்த லாக்டவுனை ரசிக்கலாம்.
தினேஷ் நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில் வந்துள்ள படம் கருப்பு பல்சர். தினேஷ் தன் காதலியை அட்ராக்ட் செய்வதற்காக ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறார் தினேஷ். இந்த பைக் வாங்கிய பிறகு பல அமானுஷ்ய விஷயங்கள் தினேஷ் வாழ்க்கையில் நடக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று செல்கிறது கதை. ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ள ஜாதியை சொல்ல நினைத்த டைரக்டர் சரியாக சொல்ல தெரியாமல் பேய், ஆவி என்று 'கதை ' விட்டுள்ளார். படத்தின் பல காட்சிகள் ரசிக்கும் படி இல்லை. தினேஷ் என்ற திறமையான நடிகரை சரியாக டைரக்டர் பயன் படுத்தவில்லை. நடிக்க ஸ்கோப் இருக்கும் இருக்கும் காட்சியில் கூட தினேஷ் நடிக்கவில்லை. ஹீரோயின் ரேஷ்மா ' உள்ளேன் அய்யா ' என்ற அளவில் தான் இருக்கிறார். படத்தில் கொஞ்சம் பரவாயில்லை என்றால் மன்சூர் அலிகான் செய்யும் காமெடி தான். மனிதர் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ஜல்லிக்கட்டு பாடல் சற்று கேட்கும் படி உள்ளது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here