
நாம் அனைவரும் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். பண்டிகை, திருவிழா, விருந்தாளிகளின் வருகை என ஸ்பெஷல் காலங்களில் வீட்டை தனித்துவமாக அலங்கரிக்கவே விரும்புவோம். சில குறிப்புகளை பின்பற்ற நம் வீடு அழகாக நேர்த்தியாக எல்லோரையும் வசீகரிக்கும்.
வீட்டை தூசி தட்டி ஜன்னல், கதவு திரைச்சீலைகளை மாற்றி அமைத்தாலே முதற்கட்ட அலங்காரம் ஆரம்பமாகிவிடும்.
தரை விரிப்புகளை வாங்கி ஹால் நடுவில் போடும்போது சின்னதாக போடாமல், நடுப்பகுதியில் பெரிய விரிப்பாக போட்டு விட பார்க்க கிராண்டாக அழகாக இருக்கும்.
வீட்டிற்கு வண்ணம் அடிக்கும்போது பழைய கலரையே செலக்ட் செய்யாமல், புதிதாக டிரெண்டி கலரை தேர்வு செய்து அடிக்க, நமக்கும் பார்க்க புத்துணர்ச்சியைத்தரும்.
பர்னிச்சரை கூடிய மட்டும் சிம்பிளாக போட்டு வைக்க இடத்தை அடைக்காமல் நீட்டாக இருக்கும்.கெஸ்ட் வரும்போது. ஃபோல்டிங் சேர், பாயை விரித்து வைத்து உபசரிக்க வசதியாக இருக்கும்.
திரைச்சீலைகள் தரைக்கு அடியிலிருந்து வெளிச்சம் வந்தால் அது பார்க்க அழகாக இருக்காது. எப்போதும் தரை வரை தொடும் திரைச்சீலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகரித்துக்காட்டும்.
சோஃபாவில் திண்டுகளை வைக்கும்போது பெரிது பெரிதாக வைக்காமல் சோபாவுக்கு ஏற்ற அளவில் ரிச்சான திண்டுகள் இரண்டு, மூன்று மட்டும் வைக்க அழகாக, உட்கார வசதியாக இருக்கும்.
சரவிளக்குகளை மிக உயரத்திலிருந்து தொங்க விடக்கூடாது. காரணம் உயரத்தில் தொங்க விடும்போது அதன் வெளிச்சம் வீட்டின் மேற்கூரையில் மட்டுமே படும். அதனால் சற்று தாழ்வாக அமைத்திட வெளிச்சம் நன்றாக கிடைக்கும்.
சாண்டிலியர் விளக்குகளை மாட்டும்போது மீடியமான விலையில், ரொம்ப டெலிகேட் டிசைன் இல்லாமல் வாங்கி மாட்ட வேண்டும். அப்போதுதான் பராமரிக்கவும்,பழசானால் மாற்றவும் ஏதுவாக இருக்கும்.
தீம் அடிப்படையில் ரொம்ப செலவு செய்து அலங்காரம் செய்வதை தவிர்க்கலாம். ஏனெனில் சில வருடங்களில் போரடித்துவிட்டால் அதை மாற்ற அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
குழந்தைகள் இருக்கும் அறையில் கார்ட்டூன் தீம்களில் சுவரில் டிசைன் பண்ணுவதை யோசித்து செய்யலாம். அவர்கள் வளர்ந்ததும் மாற்றி அமைக்கத் தோன்றும். ப்ளெயின் கலரில் வண்ணம் தீட்ட என்றும் இனிமையாக இருக்கும்.
குழந்தைகள் வரும்போது, விருந்தினர் வரும்போது கண்ணாடி, பீங்கானில் ஆன ஷோபீஸ்களை வைப்பதை தவிர்க்கலாம். தெரியாமல் அவர்கள் உடைத்துவிட்டாலும் மனஸ்தாபமாக போகும்.
வீட்டின் எல்லா இடங்களிலும், வாசனை கேண்டில்கள், ரூம் ஸ்பிரே மைலடாக அடித்துவிட சுகந்த மணம் அனைவரையும் கவரும்.
ஓணம் போன்ற விழாவிற்கு பூக்களால் அலங்கரிக்கும் போது எளிதில் கால் பட்டு அழியாத இடத்தில் போடலாம்.
நவராத்திரி விழாவின் போது ஹாலின் நடுவே பட்டு ஷால் அல்லது ஆர்ட்டிபிஷியல் பூக்களால் ஆன தோரணங்களை கட்டிட சூப்பராக இருக்கும்.
நவராத்திரி விழாவின்போது ஹாலின் நடுவே ஆலம் கரைத்து கொலுவில் முன் வைக்கும் தட்டில் ப கற்பூரம், சந்தனம் துளி கரைத்து ஊற்றி வைக்க மெல்லிய வாசம் தெய்வீகமாக இருக்கும்.
முக்கியமாக டி வி யூனிட்டை மாற்றி அமைப்பது நல்லது. டி வி நிகழ்ச்சிகளில் மூழ்கினால் வந்தவர்களிடம் சந்தோஷமாக நேரம் செலவிட இயலாது. ஹாலில் மெல்லிய இசை பரவிட செய்ய கேட்க ஏதுவாக, இனிமையாக இருக்கும்.
வாசலில் அலங்கார செடியாக ஒன்று பெரிதாக காப்பர் பேஸ்டு ஜாடியில் வைத்துவிட நன்றாக இருக்கும்.
மொத்தத்தில் திருவிழா, பண்டிகைகளை சிறப்பிப்பது இது போன்ற விஷயங்களே. அலங்கரித்து மகிழ்வோம். மகிழ்விப்போம்.