

நமது குடும்பம் எப்பொழுதும் கலகலப்பான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றால், அதற்கு நம்முடைய அணுகுமுறையில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்தாலே போதும். அதற்கான எளிய வழிகள் இதோ:
ஆரோக்கியமான உரையாடல்கள் Communication:
அன்பான வரவேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. காலையில் எழுந்தவுடன் ஒரு புன்னகையுடனும், மாலையில் வேலை முடிந்து வருபவர்களை இன்முகத்தோடும் வரவேற்பதும் அந்த நாளில் அழுத்தத்தை பாதியாகக் குறைக்கும்.
பகிர்வு: இந்த நாள் எப்படி இருந்தது போன்ற எளிய கேள்விகள் குடும்ப உறுப்பினர்கள் இடையே நெருக்கத்தை உண்டாக்கும். ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேசுவதே பாதி பிரச்னைகளைத் தீர்த்து விடும் .அதற்கு இது போன்ற பகிர்வுகள் முக்கியம்.
பாராட்டும் பழக்கம்:
உணவின் சுவையாக இருக்கட்டும் அல்லது வீட்டில் யாராவது செய்த ஒரு சிறு உதவியாக இருக்கட்டும் அதை வாய் விட்டுப் பாராட்டுங்கள் அல்லது நன்றி என்ற வார்த்தையைக் கூறினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் (Positive energy) அதிகரிக்கும்.
டிஜிட்டல் இடைவெளி Digital Detox;
உணவு நேரத்தில் போன் வேண்டாம். அனைவரும் சேர்ந்த மர்ந்து சாப்பிடும்போது மொபைல் போன், டிவி பார்ப்பதைத் தவிர்ப்பது மிக முக்கியம்.இந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசும் நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துங்கள்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு:
வாரத்தில் ஒரு முறையாவது கேரம், செஸ், தாயகட்டம் போன்ற பலகை விளையாட்டுகளை (Board Games) விளையாடலாம்.
கூட்டுச் சமையல்:
வார இறுதிகளில் அனைவரும் சேர்ந்து சமைப்பது அல்லது புதிய உணவுகளை முயற்சிப்பது ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கும்.
வீட்டுச் சூழல் மற்றும் அமைப்பு;
இயற்கை ஒளி, வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து வெளிச்சமும், காற்றும் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அடைபட்ட அறையை விட வெளிச்சமாக அரை மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும்.
இசை: அவ்வப்போது மெல்லிய இசை அல்லது பக்தி பாடல்களை ஒ லிக்க விடுவது வீட்டின் அதிர்வுகளை (vibrations) அமைதிப்படுத்தும்.
மேலும் கலகலப்பான வீட்டிற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
குறைகளைத்தாண்டி நிறைகளை சொல்ல வேண்டியது அவசியம். நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மேலும் ஒருவர் பேசும்போது முழுமையாக கேட்பது இவை எல்லாம் செய்ய வேண்டிய விஷயங்கள்.
பழைய கசப்பான சம்பவங்களை பேசுவது, சின்ன விஷயங்களுக்கு எரிச்சல் அடைவது, மற்றவர் பேசும்போது குறுக்கிடுவது இவைகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் கலகலப்பான சூழலை உருவாக்க குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சிறிய சுற்றுலா அல்லது பிடித்த இடத்திற்கு சென்று வந்தால், அது அந்த வருடத்திற்கான ரீசார்ஜ்ஜை கொடுத்து உற்சாகத்துள்ளல் போட வைக்கும்.
இதுபோல் சில விஷயங்களை மாற்றி அமைத்தாலே கலகலப்பான வீடு அமைவது உறுதி.