சமையலறையில் மரத்தாலான வெட்டும் பலகை காய்கறிகளை நறுக்கவும் சமையலறை பாதுகாப்பிலும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆகவே, மரத்தாலான வெட்டும் பலகையை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் மரத்தாலான வெட்டும் பலகையில் உள்ள சிதைவு, விரிசல், பாக்டீரியா பரவல் போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்த சமையலறை வெட்டும் பலகையை (Cutting Board) வாங்க...
பயன்படுத்திய உடனே சுத்தம் செய்யுங்கள்:
ரத்தாலான பலகையில் இறைச்சி, மீன், கூர்மையான காய்கறிகள் ஆகியவற்றை வெட்டிய பிறகு அதனை பலகையில் நீண்ட நேரம் வைத்திருக்காமல், உடனடியாக லேசான பாத்திரம் கழுவும் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் மென்மையான துணி அல்லது பஞ்சு பயன்படுத்தி கழுவ வேண்டும். மேலும், மரத்தாலான பலகையை நீண்ட நேரம் நனைக்கும் பழக்கத்தை தவிர்ப்பதோடு கடினமான ஸ்க்ரப்பர் கொண்டு சுத்தம் செய்வதையும் அறவே தவிர்க்க வேண்டும்.
சரியான உலர்த்துதல்: வெட்டும் பலகையை கழுவிய பிறகு கவுண்டரில் வைப்பதை தவிர்த்து விட்டு, உலர்ந்த துணியால் உடனடியாக துடைப்பதோடு காற்றோட்டம் உள்ள இடத்தில் இதனை செங்குத்தாக வைக்க வேண்டும். இதனால் பலகையின் அனைத்து பக்கங்களும் உலர்ந்து ஈரப்பதம் பரவாமல், அதாவது மரத்தில் நீர் நுழைவது தடுக்கப்பட்டு சிதைவை குறைத்து விடும்.
சரியான எண்ணெய்கள் பயன்படுத்துதல்: தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை மாதத்திற்கு ஒரு முறை வினிகரால் சுத்தம் செய்த பிறகு மென்மையான துணியால் தடவ மரத்தாலான வெட்டும் பலகையின் வாழ்நாள் நீட்டிக்கும். இந்த எண்ணெய் குறைந்தது 3 முதல் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மரத்தில் ஊட்டமளிக்கும்.
உணவுக்கேற்ப பலகைகளைப் பிரித்தல்: குறுக்கு மாசுபாட்டை தவிர்க்க முடிந்தவரை காய்கறிகளுக்கு ஒரு வெட்டும் பலகையும், பச்சை இறைச்சிக்கு வேறு பலகையும் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் உணவுக்கு கிருமிகள் பரவாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குடும்ப ஆரோக்கியத்தையும் காக்கிறது.
மேற்கூறிய எளிய பழக்க வழக்கங்கள் மூலம் மரத்தாலான வெட்டும் பலகையில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பாக இருந்து நீண்ட காலம் புதியது போல காட்சியளித்து உடல் நலத்தை பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றும்.
இந்த சமையலறை வெட்டும் பலகையை (Cutting Board) வாங்க...