ஒற்றை கதவா? இரட்டை கதவா? ஃப்ரிட்ஜில் எது சிறந்தது?

One door vs double door Fridge
Single door vs double door Fridge
Published on

ஃபிரிட்ஜ் வாங்கும் திட்டத்தில் உள்ளவர்கள் ஒரு கதவு வைத்த ஃப்ரிட்ஜ் வாங்குவது நல்லதா? அல்லது இரண்டு கதவுகள் வைத்த ஃப்ரிட்ஜ் வாங்குவது நல்லதா? என்று யோசிப்பது அவசியம்தானே? வாருங்கள் எது சிறந்தது என்று பார்ப்போம்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்போது எப்போதும் சிறந்த ஒரு பொருளை வாங்கவே அனைவரும் விரும்புவர். அதுவும் ஃப்ரிட்ஜ் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது போட்ட பணத்திற்கேற்ப சிறந்த பொருளையே வாங்க நினைப்பர். ஃப்ரிட்ஜில் எண்ணற்ற பிராண்டுகள் சந்தையில் இருக்கின்றன. குறிப்பாக ஒற்றை கதவு (Single Door) மற்றும் இரட்டை கதவு (Double Door) ஃபிரிட்ஜ்கள் என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. உங்கள் குடும்பத் தேவைக்கும், பட்ஜெட்டிற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய உதவும் கட்டுரைதான் இது.

ஒற்றை கதவு ஃபிரிட்ஜ் (Single Door Refrigerator)

ஒற்றை கதவு ஃபிரிட்ஜ்கள் பெரும்பாலான இந்தியர்கள் வீடுகளில் காணப்படுபவை.

  • இவை பொதுவாக குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துபவை. இதன் ஆரம்ப விலையும் குறைவாக இருக்கும். பட்ஜெட் ஃபிரிட்ஜ் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

  • இவை சிறிய குடும்பங்கள் (1 முதல் 3 நபர்கள் வரை) அல்லது ஃபிரிட்ஜை குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்கு மிகச் சரியானவை.

  • இதன் ஃப்ரீசர் பகுதி, ஃபிரிட்ஜின் முக்கிய சேமிப்புப் பகுதியிலேயே அமைந்திருக்கும். ஐஸ் கட்டிகள் மற்றும் உறைந்த பொருட்களை சேமிக்க ஒரு சிறிய மூடிய பகுதி மட்டுமே இருக்கும்.

  • இதில் டிஃப்ராஸ்ட் (Defrost) செய்யும் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், உள்ளே சேரும் பனிக்கட்டிகளை அகற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வியாழன் உங்க கையிலயே இருக்கு! ஆள்காட்டி விரல் மச்சத்தின் அதிர்ஷ்ட ரகசியம்!
One door vs double door Fridge

இரட்டை கதவு ஃபிரிட்ஜ் (Double Door Refrigerator)

இரட்டை கதவு ஃபிரிட்ஜ்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் வசதிகளிலும் மேம்பட்டவை.

  • ஒற்றை கதவு ஃபிரிட்ஜை விட இவற்றின் விலை சற்று அதிகம், மேலும் மின்சாரம் சற்று அதிகமாக இழுக்கும்.

  • இவை பெரிய குடும்பங்கள் (4 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்) அல்லது நிறைய ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய பொருட்கள் உள்ள வீடுகளுக்கு ஏற்றவை.

  • இதில் ஃப்ரீசர் பகுதிக்கும் (மேல் அல்லது கீழ்), முக்கிய ஃபிரிட்ஜ் பகுதிக்கும் தனித்தனி கதவுகள் இருக்கும். இது குளிர்ச்சி வீணாவதைக் குறைக்கிறது.

  • பெரும்பாலானவை ஃப்ராஸ்ட் ஃப்ரீ (Frost-Free) தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அதாவது, பனிக்கட்டிகள் தானாகவே உருகிவிடும்; நாம் டி-ஃப்ராஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  • இதில் பல இடங்களில் குளிர்ச்சி பரவும் அமைப்புகள் (Multi-Flow Air System) இருப்பதால், ஃபிரிட்ஜ் முழுவதும் குளிர்ச்சி சீராகப் பரவும்.

இதன்மூலம், உங்கள் குடும்பத்தின் அளவு, பட்ஜெட் மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் சரியான ஃபிரிட்ஜை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
யாருக்கு எந்த ரெயின்கோட் சிறந்ததாக இருக்கும்?
One door vs double door Fridge

நீங்கள் குறைவான பட்ஜெட்டில், குறைவான பயன்பாட்டிற்கு, குறைந்த மின்சாரச் செலவில் ஃபிரிட்ஜ் வாங்க விரும்பினால், ஒற்றை கதவு ஃபிரிட்ஜ் சிறந்தது.

நீங்கள் பெரிய குடும்பமாக இருந்து, அதிக பொருட்களை சேமிக்க விரும்பினால், தானாகவே டிஃப்ராஸ்ட் ஆகும் வசதி, மற்றும் சிறந்த குளிர்ச்சி வேண்டும் என்று நினைத்தால், இரட்டை கதவு ஃபிரிட்ஜ் தான் சிறந்த தேர்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com