யாருக்கு எந்த ரெயின்கோட் சிறந்ததாக இருக்கும்?

Rain Coat
Rain Coat
Published on

ஒருவரின் தேவைக்கேற்ப ரெயின்கோட் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கனமழைக்கு நீடித்து உழைக்கும் மற்றும் நீர் புகாத பாலியஸ்டர் ரெயின்கோட் சிறந்தது. லேசான மழைக்கு நைலான் ரெயின்கோட் போதுமானது. காரணம் இது இலகுவானது, மென்மையானது மற்றும் பராமரிக்கவும் எளிதானது. நைலான் அல்லது பாலியஸ்டர் கலவைகள் குறைந்த எடை மற்றும் எளிதாக மடித்து பையில் எடுத்துச் செல்ல வசதியானது.

ஆனால் அவற்றை வாங்கும்பொழுது ஜிப், பட்டன்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்ப்பதுடன், போதுமான அசைவு சுதந்திரம் (Free movement) உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரெயின் கோட்டின் வகைகள் துணி மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும். ஆனால் ரெயின் கோட் வாங்கும் பொழுது டபுள் லேயர் உள்ள ரெயின் கோட்டின் தையல் பகுதியில் கண்ணாடி போல் உள்ள ஒரு டேப்பைக் கொண்டு ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் தையல் பகுதியின் வழியாக தண்ணீர் வந்து நம் ஆடைகள் நனைத்து விடும்.

1. அனைத்து வானிலை ரெயின்கோட்கள்:

இதில் நீக்கக்கூடிய புறணி உள்ளது. இது வெவ்வேறு வானிலை நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவுகிறது. எனவே இவற்றை எந்த வானிலையிலும் பயன்படுத்தலாம்.

2. மெல்லிய ரெயின்கோட்கள்:

எடை குறைவாகவும், எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையாகவும் இருக்கும் ரெயின்கோட்டுகள் இவை. பெரும்பாலும் நீர்ப்புகா அல்லது நீர் எதிர்ப்பு துணிகளால் ஆனவை. விண்ட்சீட்டர்கள், மெல்லிய ட்ரெஞ்ச் கோட்டுகள் மற்றும் மெல்லிய மழை ஜாக்கெட்டுகள் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவற்றை பயணத்தின் பொழுது பயன்படுத்த வசதியாக இருக்கும்.

3. மடிக்கக்கூடிய ரெயின்கோட்கள்:

இலகுரக மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ரெயின்கோட்டுகள். இவை ஒரு சிறிய பை அல்லது பாக்கெட் அளவிலான பையில் மடிக்கப்பட்டு, எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். திடீர் மழைக்கு தயாராக இருக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் புல்ஓவர் ரெயின்கோட்டுகள், ரெயின் ஜாக்கெட்டுகள் போன்ற பல ஸ்டைல்களில் இவை கிடைக்கின்றன. சிலவற்றில் கூடுதல் வசதிக்காக பெரிய பாக்கெட்டுகள் கூட இருக்கிறது.

4. வினைல் ரெயின்கோட்டுகள்:

இந்த வகை ரெயின்கோட்கள் பெரும்பாலும் வினைல் அல்லது வினைல் பூச்சு கொண்ட துணியால் செய்யப்படுகின்றன. இவை பாலிவினைல் குளோரைடு எனப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை சிறந்த நீர்ப்புகா பண்புகள் மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. இவற்றை அவ்வப்போது கழுவுதல் மற்றும் வெப்பத்தை பயன்படுத்துதல் போன்ற பராமரிப்பு தேவைப்படும்.

5. ட்ரெஞ்ச்கோட்கள்:

இதை பெரும்பாலும் இலகுரக பருத்தி/ பாலியஸ்டர் துணியால் செய்யப்படுபவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!
Rain Coat

6. போன்சோ ரெயின்கோட்கள்:

போன்சோ ரெயின்கோட்டுகள் அணிய எளிதான, தளர்வான, மழைக்கோட் வகையாகும். இவை பொதுவாக மற்ற மழைக்கோட்டுகளைப் போல உடலோடு இறுக்கமாக பொருந்தாது. மழை, குளிர் மற்றும் பனிப்பொழிவில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. இவற்றை எளிதாக அணியக்கூடிய வகையில் தலைக்கு மேல் போட்டுக் கொள்ளலாம். இவை பல்வேறு வகையான வடிவங்களில் கிடைக்கின்றன.

7. PVC ரெயின்கோட்கள்:

மலிவானவை, நீடித்து உழைக்கக் கூடியவை, மழையிலிருந்து பாதுகாக்கும் நீர்ப்புகா தன்மையைக் கொண்டவை. இவை பொதுவாக நெய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களாக கருதப்படுகின்றன. இவற்றின் நீர்ப்புகாத் தன்மை காரணமாக ஃபேஷன், பேக்கேஜிங், சுகாதாரம் மற்றும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. PVC அல்லது PVC பூச்சு கொண்ட துணியால் செய்யப்பட்டவை. இவை நீர்ப்புகா தன்மையை உறுதிப்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
வாட்ச்மேன் வேலை
Rain Coat

8. தொழில்துறை ரெயின்கோட்கள்:

தொழில்துறை ரெயின்கோட்டுகள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் கடுமையான வானிலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்ற கனரக வேலைகளில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தப்படுபவையாகும். இவை பொதுவாக பிவிசி அல்லது ரப்பர் பூசப்பட்ட பாலியஸ்டர் துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. இவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.

9. பிளாஸ்டிக் ரெயின்கோட்கள்:

இவை பிளாஸ்டிக் பொருட்களால் ஆனவை. ரெயின் கோட்டுகள், பொன்சோஸ்கள் (ponchos) போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பாரம்பரிய ரெயின் கோட்டுகளை விட இலகுவாகவும், மலிவாகவும் இருப்பதால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com