வீட்டிற்குள் பாம்பு! அச்சச்சோ என்ன செய்வது? வராமல் எப்படி தடுப்பது ?

Snake inside the house
Snake inside the house
Published on

பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது. அந்த வகையில் கிராமப்புறமாக இருந்தாலும், நகர்புறமாக இருந்தாலும் மழைக்காலம் தொடங்கிவிட்டால் அழையா விருந்தாளியாக நம் வீட்டிற்குள் பாம்பு வந்துவிடும். உலகளவில் இந்தியாவில் தான் பாம்பு கடியால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என தரவுகள் சொல்கின்றன. போதிய அளவு பாம்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில் பாம்பு மனிதர்களை தானாக சென்று கடிப்பது இல்லை. மனிதர்களால் ஆபத்து ஏற்படும் போது தன்னை தற்காத்து கொள்வதற்காக பாம்பு மனிதனை கடிக்கிறது. இந்நிலையில் பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் வீட்டிற்குள் வராமல் தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

வீட்டிற்குள் பாம்பு வராமல் தடுப்பது எப்படி?

வீட்டில் உள்ள கழிவு குழாய்களின் அடைப்பை வலை போன்ற அமைப்பை வைத்து அடைக்க வேண்டும்.

பசுஞ்சாணத்தை கரைத்து வீட்டை சுற்றி தெளிக்க வேண்டும்.

வீட்டின் அருகில் குப்பைகள் சேரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகள் இருந்தால் எலி, தவளை போன்றவை வரக்கூடும். இதை பிடிப்பதற்கு பாம்பு வரும். 

பாம்பு செடி, கற்றாழை, துளசி, மாசிப்பச்சை, சாமந்தி, ஓமவல்லி ஆகிய செடிகளை வீட்டின் அருகில் வைத்தால் பாம்பு வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும். ஏனென்றால் இந்த செடிகளின் வாசனையை பாம்பினால் தாங்கிக்கொள்ள முடியாது.

வீட்டின் ஜன்னல், கதவுகளில் வெங்காயம், பூண்டு அரைத்த விழுதை தடவ வேண்டும். இந்த வாசனைக்கு பாம்பு வராது.

பிளீச்சிங் பவுடர் கலந்த நீரை வீட்டை சுற்றி தெளிக்கலாம்.

இலவங்கப்பட்டை பொடியை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வீட்டை சுற்றி வேறு எங்காவது ஓட்டை இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும்.

பாம்பு எந்த வழியில் வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறதோ, அந்த இடத்தில் கல் உப்பை கொட்டி வைத்தால் பாம்பு வருவது தடுக்கப்படும்.

வீட்டின் வெளியே கழிப்பறை இருந்தால் சுத்தமாகவும், இரவில் வெளிச்சமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டை சுற்றியும் வெளிச்சமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பாம்பு என்றால் படையே நடுங்கும்... ஆனா இவனுக்கு மட்டும் பயமே கிடையாது! எவன்டா அவன்?
Snake inside the house

வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 

வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் உடனே பயந்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று கதவை மூடி விடக்கூடாது. ஏனென்றால் பாம்பு எங்கு சென்று அடைந்துள்ளது என தெரியாமல் அதை கண்டுப்பிடிப்பது கடினமாகி விடும்.

பதட்டப்படாமல் பாம்பு எங்கு செல்கிறது என கவனித்துக்கொண்டு, தீயணைப்பு துறை, பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

பாம்பு உங்களை நோக்கி வந்தால் நீளமான குச்சியை வைத்து கீழே தட்டுங்கள். இந்த அதிர்வுகளால் உங்களை நோக்கி பாம்பு வராமல் தடுக்கப்படும்.

பயிற்சி இல்லாமல் தானாக சென்று பாம்பு பிடிக்கும் செயலில் ஈடுபட கூடாது. கட்டாயம் அதன் அருகில் செல்ல கூடாது. பாம்பு தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கடிக்க முற்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com