காற்றின் நஞ்சை நீக்கும் சமையலறை பாம்பு செடி!

snake plant in kitchen
snake plant in kitchen
Published on

Snake Plant in Kitchen Vastu: பொதுவாக நமது வீடுகளில் எதிர்மறை எண்ணங்கள் பெருகி நன்மைகள் அடைவதற்கு பலவிதமான பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்றுவோம். அதில் ஒன்று தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து குறிப்பிடும் செடிகளில் ஒன்று தான் சமையலறையில் வளர்க்கப்படும் பாம்பு செடி. இதை ஏன் சமையலறையில் வைக்க வேண்டும்.? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன? மற்றும் தகவல்களை பார்ப்போம்.

பாம்பு செடிகள் (Snake plant, Sansevieria) மாமியார் நாக்கு என்றும் அழைக்கப்படுவது சுவாரஸ்யம். வாஸ்து சாஸ்திரத்தின் படி நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரும் என்று நம்பப்படும் ஒரு பிரபலமான உட்புற தாவரமாக உள்ளது.

இச்செடி ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. நிமிர்ந்து வளரும் மற்றும் கிட்டத்தட்ட செயற்கை இலைகளை ஒத்த அதன் பசுமையான அழகிய வாள் வடிவ இலைகள் கொண்ட பாம்பு செடிகள் பெரும்பாலும் வீட்டு அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை பராமரிக்க எளிதானவை மற்றும் கண்ணுக்கு இன்பம் தருகின்றன,

இதை சமையலறையில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

பாம்பு செடிகள் நச்சுகள் மற்றும் மாசுபாடுகளை நீக்கி காற்றை தூய்மை செய்கிறது. குறிப்பாக காற்றில் உள்ள நச்சுப் பொருட்களான (ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலீன்) நீக்கி, காற்றை சுத்தப்படுத்துகின்றன. இதனால் அவை சமையலறைகளுக்கு ஒரு சிறந்த கிருமிநாசினி போன்ற நன்மைகளுள் ஒன்றாக அமைகின்றன.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்பு செடிகள் சமையலறைக்கு நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. சமையலறை என்பது வீட்டின் உயிர்நாடி என்பதால் நேர்மறை உணர்வுடன் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியம் தரும் என்பது நம்பிக்கை.

பாம்பு செடிகளைப் பராமரிப்பது எளிது .அதிக கவனிப்பு இல்லாமல் வளரக்கூடியவை மற்றும் குறைந்த வெளிச்சம் இருந்தால் போதும், இதனால் அவை குறைந்த இயற்கை ஒளி கொண்ட சமையலறைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

சமையலறையில் பாம்பு செடியை வைப்பதற்கான வாஸ்து குறிப்புகள்:

  • உங்கள் சமையலறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் பாம்பு செடியை வைப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகம் பெறலாம்.

  • அனல் வீசும் அடுப்பு அல்லது சமையல் பகுதிக்கு அருகில் பாம்பு செடியை வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் வெப்பம் மற்றும் புகை செடியை சேதப்படுத்தி விடும்.

  • பாம்பு செடியை சுத்தமாகவும் தூசி இல்லாமல் வைத்திருப்பது அவசியம். செடியின் தூய்மையினால் உங்கள் சமையலறைக்கு நேர்மறை ஆற்றலை தொடர்ந்து கொண்டு வர முடியும்.

  • மேலும் இந்தச் செடி பொதுவாக பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை உட்புற காற்றை சுத்திகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதன் மூலம், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.

  • காற்றில் உள்ள தூசி மற்றும் பொடுகு போன்ற ஒவ்வாமைகளின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பிளாக் மாம்பா பாம்பு குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!
snake plant in kitchen

இத்தகைய நன்மைகள் இருப்பதால் பாம்பு செடிகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவற்றின் இலைகளில் மிதமான விஷத்தன்மை உள்ளதால் இதை சாப்பிட்டால் நாக்கில் வீக்கம் மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும். இந்த செடியை கடிக்க வாய்ப்புள்ள குழந்தைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து விலக்கி வைப்பது புத்திசாலித்தனம்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் சமையலறையில் ஒரு பாம்பு செடியை வைப்பதன் மூலம், அதன் நன்மைகளைப் பயன்படுத்தி மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை குடும்பத்தில் உருவாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com