'பார்க்கிங்' ப்ராப்ளமா? வழி இருக்கே!

Parking
Parking
Published on

பார்க்கிங் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? இந்த நிலையை எப்படி சரி செய்யலாம்…. இந்தியாவில், கார் வாங்குவது ரொம்பவே சுலபமாகி விட்டது. அதற்கு உதவ வங்கி கடன், பைனான்ஸ் என்று பல வசதிகள். ஒரு புது காரை ஒரு வாரத்தில் நம் வீட்டின் முன் நிறுத்தி விடலாம். ஆனால் அதற்கான தகுந்த பார்க்கிங் உங்களிடம் உள்ளதா? இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசித்து நமக்கான பார்க்கிங்கை எப்படி உருவாக்கிக்கலாம் வாருங்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைந்த இடமே போதுமானது காரை நிறுத்துவதற்கு. எந்த ஒரு இடமும் இல்லை என்றால், அதற்கு பல நிலைகளை கொண்ட கார் பார்க்கிங் அமைப்பே சிறந்த தீர்வாகும். இந்த அமைப்புகள் குறிப்பிட்ட பகுதியிலே பல கார்களை நிறுத்துவதற்கு வசதியை தரலாம். கூடுதலாக, இதில் சிறிய கார் லிஃப்ட்கள் பயன்படுத்தபடுகின்றன. இது கார்களை செங்குத்தாக இருபுறமும் தேவைக்கேற்றவாறு அடுக்கி நிறுத்த பயன்படுகிறது.

பொது இடங்களுக்கு, ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்புகள் (smart parking management systems) பல நன்மைகளை தரும். இந்த அமைப்புகள் நெரிசலை குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த பார்க்கிங் அனுபவத்தை வருபவர்களுக்கு சுலபமாகிவிடவும் உதவுகின்றன. இதிலுள்ள ஆன்லைன் முன்பதிவு வசதி, தானியங்கி அணுகல் கட்டுப்பாடு ( automated access control) மற்றும் நிகழ்நேர நெரிசல் கண்காணிப்பு போன்ற அம்சங்கள் பார்க்கிங்கை மிகவும் திறமையாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றும்.

மற்றொரு புதுமையான அணுகுமுறை பசுமை பார்க்கிங் முயற்சிகள் (green parking initiatives) ஆகும். இது கார்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம் அதற்கு இணையாக மின்சார வாகனங்கள் (EVகள்) மற்றும் Ride sharing (ஷேர் கால் டாக்ஸி) போன்றவற்றை பயன்படுத்தும் முறை. இவற்றுக்கான பிரத்யேக இடங்களை உருவாக்கி EV சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஒரு சிலருடன் பகிர்ந்துகொள்ளப்படும் சவாரிகளை மேற்கொண்டால் பெறப்படும் ஊக்கத்தொகை போன்றவை, இந்த வகை போக்குவரத்தை ஊக்குவிக்கும் மற்றும் பார்க்கிங் இடங்கள் தேவைப்படும் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

பயன்படாத பகுதிகளை அனுமதியோடு பயன்படுத்துங்கள்:

பயன்படுத்தப்படாத இடங்களை தற்காலிக பார்க்கிங் தீர்வுகளாக மாற்றுவதையும் வீட்டு உரிமையாளர்கள் பரிசீலிக்கலாம். அதற்கான தற்காலிக கூரைகள், தரைகள் மற்றும் பல பயன்பாட்டு இடங்களை உருவாக்கினால் உங்கள் காருக்கு எவ்வித பாதிப்பும் நிகழாது. மேலும், இந்த இடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் நீங்கள் இடையூறாக இல்லாமல் இருக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை மென்மேலும் அதிகரிக்க அவரவர்களின் தேவைகளும் சற்று நீண்டு கொண்டே தான் போகிறது. இது வீட்டின் உள் பயன்படுத்தும் பொருட்களையும் தாண்டி வெளியில் நிறுத்தும் வாகனங்களிலும் எதிரொலிக்கிறது. அதை விற்பவர்கள், பராமரிப்பவர்கள் மற்றும் இதற்கான வரியை வசூலிக்கும் அரசுகள் பலனடைகிறார்கள். ஆனால் இதை ஓர் அக்கறையுடன் பராமரிக்க வேண்டிய இடத்தில் இருப்பது நாம்தான்.

இதையும் படியுங்கள்:
அடுத்தடுத்து படகு விபத்து… டாராக் தீவில் படகு விபத்து... 20 பேர் பலி!
Parking

பார்க்கிங் என்று வரும் போது அதற்கான இடம் இல்லாத பட்சத்தில் சிலருக்கு கோபம், கவலை மற்றும் பல மோதல்களும் அரங்கேறுகிறது. ஆக, இந்த தேவையற்ற விஷயங்களை புறந்தள்ளி வீட்டிலோ அல்லது பொது இடங்களில் பார்க்கிங் இல்லாத பட்சத்தில் அருகில் வசிப்பவர்களிடையோ அல்லது சம்மந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் கலந்தாலோசித்து மேலே குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பார்க்கிங் நேரத்தை கூலாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com