பிடித்த நபர்களுக்கு என்ன பரிசு தரலாம் என்பதில் குழப்பமா?

Gift
Gift
Published on

உங்களுக்குப் பிடித்த ஒருவருக்கு அவர்களின் விருப்பத்தேர்வுகள் அல்லது அவர்களின் விருப்பமான விஷயங்களைப் பற்றி நேரடியாக அறியாமல் அவர்களுக்கான ஒரு பரிசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சவாலான காரியமாக இருக்கலாம். ஆனால், சில யுக்திகளை கையாளும்போது, இந்த தேர்வு எளிமையாகலாம்.

கவனிப்பு மற்றும் சூழல் குறிப்புகள்(Observation and Context Clues): 

உங்களுக்குப் பிடித்த நபரின் பொதுவான விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்பதைக் கருத்தில் கொண்டு முதலில் தொடங்குங்கள். அவர்களின் உரையாடல்களில் உள்ள நுட்பமான குறிப்புகள், அவர்களின் சூழல் மற்றும் பிற பரிசுகள் பெற்றபோது அவர்கள் உணர்ந்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்திப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் புத்தகம் படிப்பதில் விருப்பம் உள்ளவராக இருந்தால், அழகாக அலங்கரிக்கப்பட்ட புத்தகம் அல்லது பிரபலமான இலக்கிய இதழுக்கான சந்தா (subscription) போன்றவை சரியான பரிசு தேர்வாக இருக்கும். சமையல், தோட்டக்கலை அல்லது உடற்பயிற்சி போன்ற உங்களுக்குத் தெரிந்த பொழுதுபோக்கில், அவர்களுக்கும் ஆர்வம் இருந்தால், அதன் தொடர்புடைய பொருளை அல்லது துணைப் பொருளை (Accessory) தேர்ந்தெடுப்பது, உங்களுக்கு அவர்கள் மீது இருக்கும் அக்கறையை பிரதிபலிக்கும்.

அனைவருக்கும் பிடித்தமான ஒன்று (Universal Appeal):

சந்தேகம் இருக்கும் பட்சத்தில், பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும் விஷயங்களை தேர்ந்தெடுக்கவும். அதில், உயர்தர சாக்லேட்டுகள், சுவையான உணவுக் கூடைகள், வாசனை மெழுகுவர்த்திகள் அல்லது நேர்த்தியான வீட்டு அலங்காரங்கள் (elegant home decor) ஆகியவை அடங்கும். இந்த பரிசுகள் ஆடம்பரத்தை வழங்குவதாலும், பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படுவதாலும்  அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. கூடுதலாக, ஸ்பா வவுச்சர், நிகழ்ச்சி அல்லது கச்சேரிக்கான டிக்கெட்டுகள் அல்லது விருப்பமான உணவகத்திற்கான பரிசு சான்றிதழ் (Coupon) போன்ற விஷயங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சிகரமான பரிசுகளாக உணர வைக்கின்றன.

நம் விருப்பத்தின் பேரில் (Personalization):

உங்கள் பரிசில் உங்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு ஒரு பரிசின் பார்வையை கணிசமாக மேம்படுத்தும். பெறுநரின் பெயர் அல்லது செல்ல பெயர்கள் அல்லது உங்கள் இருவருக்கும் தெரிந்த சில மறக்கமுடியாத தேதிகளை நினைவுகூர்வது போன்ற  சாதாரணப் பொருட்களையும் சிறப்பானதாகவும் தனித்துவமானதாகவும் உணர வைக்கும். 

அதுபோல, உங்களால் பொறிக்கப்பட்ட நகைகள், உங்களால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது இப்போதுள்ள டிஜிட்டல் புகைப்பட ஆல்பங்கள் போன்ற உங்கள் விருப்பத்தில் உருவாகும் பரிசுகள், நீடித்த நல்ல நினைவுகளை அவர்களுக்கு உருவாக்கலாம்.

அளவை விட தரம் (Quality Over Quantity):

உயர்தர பரிசில் நீங்கள் முதலீடு செய்யும்போது, அதன் மதிப்பே உங்களை அவர்களிடம் உயர்த்திக் காட்டும். அந்த பரிசை பெற்றபின் அவர்களுக்கு அதன் மேல் விருப்பம் இல்லாவிட்டாலும், அதன் தரமே அவர்களுக்கு ஆசையை வரவழைத்து பிடித்துபோகிவிடும். 

எதிர்வினைகளை மதிப்பீடு செய்யுங்கள் (Assessing Reactions):

உங்கள் பரிசு அவர்களால் ஆசையாக பெறப்படுமா என்பதை அறிய, கடந்த கால அனுபவங்களையும் அவற்றின் மீதுள்ள பொதுவான விமர்சனங்களையும் கவனியுங்கள். பின், அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்...

இதையும் படியுங்கள்:
இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 
Gift

எது நடைமுறையில் அவர்களுக்கு தேவை அல்லது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று யோசியுங்கள். ஒரு நபர் குறைந்தபட்ச சாதாரண வாழ்க்கை முறையை பின்பற்றினால், அவர்களுக்கு ஸ்டைலான டிஜிட்டல் பொருட்களே சிறந்த பரிசாக இருக்கலாம். மாறாக, அவர்கள் பல விஷயங்களை சேகரிப்பதில் மகிழ்ந்தால், அவர்களுக்கு சில தனித்துவமான அல்லது அனைவராலும் வாங்கப்படாத சில அரிய பொருட்கள் சிறந்த தேர்வாக இருக்கும். 

விவேகமான தகவல்கள் (Discreet Inquiries): 

உங்கள் நோக்கத்தை துளியும் விட்டுவிடாமல், உங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலம் அவர்களின் விருப்பங்களைப் பற்றி நுட்பமாக விசாரித்துப் பாருங்கள். ஒருவரிடம் நேரடியாக கேட்காமலே அவர்களை பற்றியத் தகவல்களை உங்களால் பெற முடியும்.

அவசரத் திட்டங்கள் (Emergency Plans):

உங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியாவிட்டால், பொருளை வாங்கிய ரசீதை சேர்த்து பரிசுடன் கொடுத்துவிடுங்கள். இது அவர்களுக்குத் தேவைப்பட்டால், அந்த பரிசைப் பிடித்தமாறி மாற்றிக் கொள்ளும் (Exchange) வசதியைத் தரும். இது அவர்களின் உள்ளுணர்வை பற்றி நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் மற்றும் அவர்களின் விருப்பங்களை மதிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com