மழைக்கால வீட்டுப் பராமரிப்பு குறித்து சில அவசியமான ஆலோசனைகள்!

மழைக்கால வீட்டுப் பராமரிப்பு
மழைக்கால வீட்டுப் பராமரிப்பு
Published on

ழைக்காலம் தொடங்கி விட்டது. இதுபோன்ற சமயங்களில் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்பது அவசியம். அவற்றை லேமினேட் செய்து ஈரப்பதம் ஊடுருவ வாய்ப்பில்லாத பகுதிகளில் பெட்டியில் வைப்பது சிறந்தது. அதுமட்டுமின்றி, முக்கியமான ஆவணங்களை நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வதும் கம்ப்யூட்டர் மற்றும் செல் மின்னஞ்சல்களில் அவற்றை சேமித்து வைப்பதும் மிகவும் அவசியம்.

மரத்தாலான கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மழைக்காலங்களில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வீக்கம் ஏற்பட்டு சரியாக மூடுவதற்கு சிரமத்தை உண்டுபண்ணும். இதற்கு மணர்துகள்கள் கொண்ட காகிதம் கொண்டு தேய்க்கலாம் அல்லது மழை தொடங்குவதற்கு முன் வார்னிஷ் அல்லது பெயிண்ட் அடிக்கலாம்.

தரை விரிப்புகள் மற்றும் போர்வைகள் மழைக்காலத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சி துர்நாற்றம் வீசும். இவற்றை பெரிய பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி சீசன் முடியும் வரை பாதுகாத்து உபயோகிக்கலாம்.

விலை உயர்ந்த மரச்சாமான்கள், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள் ஆகியவற்றை மழைக் காலத்தில் திறப்பதும், மூடுவதும் கடினமாக இருக்கும். அத்துடன் மரச்சாமான்களை சுவர்களில் இருந்து நான்கைந்து அங்குல தூரம் தள்ளி வைப்பது ஈரப்பதத்தை தடுக்க உதவும். அலமாரிகளுக்குள் நாப்தலின் உருண்டைகள், வேப்ப இலைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். மழை பெய்யும் சமயம் ஜன்னல்களை மூடி வைக்க, மர சாமான்கள் மீது தண்ணீர் படுவதைத் தவிர்க்கலாம். கிருமி நாசினிகள், வினிகர் போன்றவற்றை கொண்டு மர சாமான்களில் ஏற்படும் பூஞ்சைகளை துடைத்து பராமரிக்கலாம்.

அதிக ஈரப்பதம் காரணமாக வீட்டிற்குள் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க சாம்பிராணி போடுவதும், துணிகள் வைத்திருக்கும் அலமாரிகளில் ஐந்து ஆறு சாக்பீஸ்களை கட்டி தொங்கவிட அவை ஈரப்பதத்தை உறிஞ்சி வாடை வராமல் தவிர்க்கும்.

வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். ஏர் பர்சனர்களை உபயோகித்து சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கலாம். அதிக கனம் இல்லாத, வெளிச்சம் வருவதற்கும், எளிதாக துவைத்து உலர வைக்கவும் கூடிய திரைச்சீலைகளை மழைக்காலத்தில் பயன்படுத்துவது அறைகளில் ஈரப்பதத்தை குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் மக்னீசியம் நிறைந்த 8 வகை உணவுகள்!
மழைக்கால வீட்டுப் பராமரிப்பு

அரிசி மாவு, கோதுமை மாவு, சத்து மாவு மற்றும் பொடிகள், தானியங்கள் ஆகியவை ஈரப்பதத்தால் கெடாமல் இருக்க அவற்றை காற்று புகாத டப்பாக்களில் சேமிப்பது நல்லது. காய்கறிகள், கொத்தமல்லி தழைகள் ஆகியவை அழுகாமல் இருக்க பேப்பர் கவரில் சுற்றி, பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைப்பதும் நல்லது.

மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய கரையான்கள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றை தடுக்க சிறந்த வழிமுறைகளை கையாள்வதும் பருவ மழையில் இருந்து நம்மையும் நமது உடைமைகளையும் தற்காத்துக்கொள்ள உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com