இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் மக்னீசியம் நிறைந்த 8 வகை உணவுகள்!

Heart Health Foods
Heart Health Foods
Published on

க்னீசியம் என்பது உடலுக்கு பல வகைகளில் நன்மை தரும் ஒரு கனிமச்சத்து. இது முறையான இதயத் துடிப்பிற்கும், உயர் இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் மிகுந்த அளவில் உதவி புரியும். ஆரோக்கியமான எலும்புகளின் கட்டமைப்பிற்கும் பராமரிப்பிற்கும் உதவும். நமக்கு வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கச்  செய்யும். மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவும்.

நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் இயல்பான இயக்கங்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தவும் உதவி புரியும். இத்தனை நன்மைகள் தரக்கூடிய மக்னீசியம் சத்து நிறைந்துள்ள 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. டார்க் சாக்லேட்: அதிகளவு மக்னீசியம் கொண்டுள்ள டார்க் சாக்லேட் இதயத்தை ஆரோக்கியத்துடன் பராமரிக்க மிகவும் உதவும். எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் கோகோ நிறைந்த டார்க் சாக்லேட்டில் 64 mg மக்னீசியம் உள்ளது. இதில் கலோரி அளவு அதிகமிருப்பதால் குறைந்த அளவில் உண்பது நலம்.

2. அவகோடா: ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்தப் பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. ஒரு மீடியம் சைஸ் அவகோடாவில் 58 mg மக்னீசியம் உள்ளது. இதை ஸ்மூத்தி, சாலட் போன்றவற்றில் சேர்த்தும், டோஸ்ட் செய்து பிரட் மீது மசித்துத் தடவி சாண்ட்விச்சாகவும் உண்ணலாம்.

3. நட்ஸ்: பாதாம், முந்திரி மற்றும் பிரேசில் நட் போன்றவற்றில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

4. லெக்யூம்ஸ்: பீன்ஸ், சோயா பீன்ஸ், கொண்டைக் கடலை, பிளாக் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளிலும் மக்னீசியம் அதிகம். இவற்றை சூப், ஸ்டூ, சாலட்களாக செய்தும், பல்வேறு உணவுகளுடன் சேர்த்து சமைத்தும் உண்ணலாம். ஒரு கப் சமைத்த பிளாக் பீன்ஸில் சுமார் 120 mg மக்னீசியம் இருக்கிறது.

5. முழு தானியங்கள்: பிரவுன் ரைஸ், குயினோவா, கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற  முழு தானியங்களில்  மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. ஒரு கப் சமைத்த குயினோவாவில் 118 mg மக்னீசியம் உள்ளது. இதை உணவாகவும் சாலட்களுடன் சேர்த்தும் உண்ணலாம்.  இதய ஆரோக்கியம் காப்பதில் முழு தானியங்கள்  முன்னிலை வகிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
திடீரென சைவ உணவுக்கு மாறுவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா? அச்சச்சோ!
Heart Health Foods

6. விதைகள்: மக்னீசியம் சத்துக்கள் நிறைந்து இதயத்தைப் பாதுகாப்பதில் பூசணி, சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளும் அடங்கும்.

7. டோஃபு: இதில் புரோட்டீன் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியம் காப்பதுடன் வெஜிட்டேரியன் மற்றும் வேகன்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கிறது. அரை கப் டோஃபுவில் 37 mg மக்னீசியம் உள்ளது. இதை சாலட், ஸ்டூ மற்றும் ஃபிரை பண்ணி உண்ணலாம்.

8. மீன் உணவு மற்றும் பச்சை இலைக் காய்கறி: மீன் உணவகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளிலும் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.

மேற்கூறிய 8 வகை உணவுகளையும் அடிக்கடி உட்கொண்டு இதயத்தை பலமுள்ளதாக்கிப் பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com