சிறிய திறந்த வகை தென்னிந்திய சமையலறை வடிவமைப்புக்கான சில யோசனைகள்!

தென்னிந்திய சமையலறை
தென்னிந்திய சமையலறை

பொதுவாக, நகர்ப்புறங்களில் சிறிய திறந்த சமையலறை வடிவமைப்புகள் பலருடைய விருப்பமாக இருக்கிறது. இந்திய குடும்பங்களில் சமையலறை அடிக்கடி பயன்படுத்தப்படும் இடங்களில் ஒன்றாக இருப்பதால் அது வசதியாகவும் அழகியல் ரீதியாகவும் இருக்க வேண்டும் என்ன நினைக்கிறார்கள். இந்தப் பதிவில் திறந்த வகை சமையலறை வடிவமைப்புக்கான சில யோசனைகளைப் பார்ப்போம்.

1. ஒருங்கிணைந்த விசாலமான தோற்றத்தை பெறுவதற்கு சமையல் அறைக்கு நடுநிலை வண்ணத்தில் பெயிண்ட் செய்யவும். ஒரே நிறத்தின் பல்வேறு ஷேடுகளை பயன்படுத்தி அந்த அறையை பெரிதாக காட்சியளிப்பது போல செய்யலாம். மென்மையான வண்ணங்கள் பிரகாசத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், அமைதியான மற்றும் நேர்த்தியான சூழ்நிலையை உருவாக்குகின்றன.

2. சுவர் மற்றும் தரைப்பகுதியில் பளபளப்பான டைல்ஸ்களை அமைத்து அறை முழுவதும் ஒளியை பிரதிபலிக்கவும், அவை அந்த சமையலறையை பிரகாசமாக்கவும் உதவுகின்றன. பெரிய சமையலறை போன்று தோற்றத்தை உருவாக்குகின்றன.

3. சமையலறையில் உயரமான கூரைகள் மற்றும் உயரமான கப்போடுகள் அமைப்பது சமையலறையை பெரியதாக தோற்றமளிக்கச் செய்யும். அழகியல் ரீதியாகவும் பார்ப்பதற்கு மனதை கவரும் விதத்தில் இருக்கும். கப்போர்டுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பயன்படுத்தி, புல் அவுட் அலமாரிகள், சுழலும் மூலை அலகுகள் (கார்னர் யூனிட்) போன்றவற்றை அமைக்கவும். மேல் பகுதியில் இருக்கும் கப்போடுகளை திறந்த நிலையில் அமைப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

4. சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பர்னிச்சர்கள் பல்திறன் கொண்டவைகளாக இருக்க வேண்டும். மல்டி ஃபங்ஷனல் ஃபர்னிச்சர் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இது சிறிய இடத்திற்கு ஏற்றவாறு வசதியாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளை முக்கோண வடிவில் இருக்கும் இடத்தில் வைப்பது தேவையற்ற இடத்தை ஆக்கிரமிப்பதை தடுக்கிறது. தேவைப்படும்போது விரிவுபடுத்தக்கூடிய மற்றும் பயன்பாட்டில் இல்லாதபோது சுருக்கக்கூடிய நீட்டிக்கக்கூடிய டைனிங் டேபிள்களைப் பயன்படுத்தவும். இடத்தை மிச்சப்படுத்த மடிக்கக்கூடிய நாற்காலிகளை இணைக்கவும்.

5. விளக்குகளை சரியான இடங்களில் பொருத்த வேண்டும். கவுண்டர் டாப், சிங்க் மற்றும் அடுப்பு போன்ற குறிப்பிட்ட இடங்களில் ஒளிரச் செய்யும் விளக்குகளை அமைக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடம் சமையல் பணிகள் நடக்கும் இடம் போன்ற பணியிடங்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். அதே நேரம் ஜன்னல்களைத் திறந்து வைத்து, பிரகாசமான சூரிய ஒளியை அறைக்குள் அனுமதிக்க வேண்டும். வெளிர் வண்ணங்களில் மெல்லிய திரைச்சீலைகள் அல்லது பிளைண்டுகள் சூரிய ஒளியை மென்மையாக்கும்.

6. ஸ்டவ் வைத்திருக்கும் இடம், பாத்திரம் கழுவும் சிங்க்கின் பின்புறம் போன்ற இடங்களில் அழகான பெயிண்டிங்குகள் அல்லது ஸ்டென்சில்கள், ஜாமெட்ரிக் பேட்டன்களில் சுவர் அமைந்திருப்பது பார்ப்பதற்கு அழகாக ஒரு தோற்றத்தை தரும்.

7. பெட்டிகள் மற்றும் கவுண்டர்டாப்புகளுக்கு பாரம்பரிய தென்னிந்திய மர பூச்சுகளை இணைக்கவும். தென்னிந்திய கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பேக்ஸ்ப்ளாஷில் வடிவமைக்கப்பட்ட டைல்களைப் பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
காக்கை கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்!
தென்னிந்திய சமையலறை

8. சக்தி வாய்ந்த எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னியை நிறுவவும். அப்போதுதான் மசாலாப் பொருட்கள் மற்றும் வறுத்தல் போன்ற பணிகளை செய்யும்போது உபயோகமாக இருக்கும்.

9. தென்னிந்திய சமையலறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பித்தளை பாத்திரங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களைக் காட்சிப்படுத்தவும். அழகியலை மேம்படுத்த பாரம்பரிய சுவர் தொங்கல்கள் அல்லது சிற்பங்கள் போன்ற கலாசார கலைப்பொருட்களைச் சேர்க்கவும்.

10. தென்னிந்திய சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, துளசி போன்ற செடிகளைக் கொண்டு ஒரு சிறிய உட்புற மூலிகைத் தோட்டத்தை உருவாக்கவும். பசுமை மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்த சிறிய பானை செடிகளை வளர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com