உங்கள் வீட்டையும் அரண்மனை போன்று மாற்ற சில யோசனைகள்!

Rajasthani style interior design
Rajasthani style interior designImage Credits: Pinterest
Published on

‘வீட்டை அரண்மனை போன்று மாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது? ராஜஸ்தான் மாநிலம் அரண்மனை போன்ற வீடுகளுக்கு பெயர் பெற்றவையாகும். கம்பீரமான நினைவுச்சின்னங்கள், நேர்த்தியான கலைநயம், ராஜ்புட் ஓவியங்கள், கோயில்களின் கட்டடக்கலை போன்று வீடுகள் ராயல் லுக்கை தரக்கூடியதாய் அமைத்திருப்பார்கள். அந்த வகை வீட்டின் உட்புற வடிவமைப்பைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. Colours: ராஜஸ்தானி வீடுகளில் பார்ப்பதற்கு துடிப்பான நிறங்களையே (Vibrant colours) பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு Royal blue, deep red, Golden yellow. நமக்கெல்லாம் எப்போதாவதுதான் பண்டிகை வரும். ஆனால். ராஜஸ்தானி வீடுகளைப் பார்க்கும்பொழுது, தினம் தினம் பண்டிகை கொண்டாடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு இருக்கும். Orange, pink, green போன்ற நிறங்களை சாதாரணமாக அவர்கள் பயன்படுத்துவார்கள்.

2. Jharokhas: ராஜஸ்தானில் பயன்படுத்தும் ஜன்னல்கள்தான் ஜரோக்காஸ். ஜரோக்காஸை கற்கள் மற்றும் மரத்தால் செதுக்கி வடிவமைத்திருப்பார்கள். அரண்மனைகள், வீடுகளில் இதுபோன்ற ஜன்னல்களை பயன்படுத்துவார்கள். அதிகமாக இதை பெண்களே வேடிக்கை பார்ப்பதற்கு பயன்படுத்துவார்கள்.

3. Golden brass decor: இந்தியாவில் உள்ள Golden brass decor items அதன் துருப்பிடித்தது போன்ற தோற்றத்திற்கும், தங்க நிறத்திற்கும் பெயர் பெற்றதாகும். இதை அதிகமாக ராஜஸ்தானி வீடுகளில் பயன்படுத்துவார்கள். இதுபோன்ற அலங்கார பொருட்களை வீட்டில் பயன்படுத்தும்போது அது வீட்டிற்கு ராயல் லுக்கை கொடுக்கும்.

4. Dhurries: இதை Cotton அல்லது Wool ல் செய்வார்கள். இதில் உள்ள டிசைன்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதை பாரம்பரியமான நிறம் மற்றும் டிசைன்களை வைத்து வடிவமைப்பார்கள். இதை வீட்டில் பயன்படுத்தும்போது வீட்டின் வடிவமைப்பை மேலும் மெருகேற்றிக் காட்டும். இது கைகளாலேயே செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அஜ்ராக் புடவையின் தனித்துவத்தை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க!
Rajasthani style interior design

5. Rajput artifacts: ராஜஸ்தானை ஆட்சி செய்தவர்கள் ராஜ்புட்கள் என்பதால், இன்றுவரை அங்கிருக்கும் வீடுகளில் ராஜ்புட்களின் கலைநயத்தின் தாக்கம் இருக்கிறது. ராஜஸ்தானியர்களின் கலைப்பொருட்கள், சுவர் ஓவியங்கள் வீட்டை மேலும் அழகுப்படுத்தும்.

6. Tarkashi inlays rajasthan: இந்த முறை என்னவென்றால், மரத்தில் Copper or silver கம்பிகளைப் பயன்படுத்தி அதில் சிக்கலான geometric and flower forms கலைநயத்தை வடிவமைப்பது. இது மிகவும் கடினமான வேலையாகும். இதை மிகவும் பழகிய திறமையான நபர்களாலேயே செய்ய முடியும். இதுபோன்ற கலைநயத்தை ராஜஸ்தானில் உள்ள பழைய அரண்மனைகளில் காண முடியும். இந்த டிப்ஸ்களையெல்லாம் நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்து, உங்கள் வீட்டையும் அரண்மனையாக மாற்றலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com