வீட்டில் காற்று மாசு படியாமல் இருக்க சில யோசனைகள்!

Tips to avoid air pollution
Tips to avoid air pollution
Published on

காற்று மாசு அடைந்து விட்டது. இதனால் நம்மில் பலருக்கும் சுவாசக் கோளாறு சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் உருவாகி விட்டன. டெல்லி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. நம் வீட்டுக்குள் காற்று மாசுபடாமல் இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டிற்குள் மாசுபாட்டை குறைக்கவும்: வீட்டிற்கு வெளியே உள்ள காற்றினை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நிச்சயமாக வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். எனவே, வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மோசமாக்கும் எந்த ஒரு விஷயங்களையும் செய்யாதீர்கள். உதாரணமாக, புகைப்பிடித்தல், வீட்டை சரியாக சுத்தம் செய்யாமல் இருத்தல், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது, அதிக வாசனை நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்து விடுங்கள். இந்த விஷயங்களை தவிர்ப்பது வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தும்.

போதுமான காற்றோட்டம்: வீட்டிற்குள் எப்போதும் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள். வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரம் ஓரளவு நன்றாக இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால், வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்கத் தயங்காதீர்கள். இதனால் உங்களுக்கு ஃபிரஷ்ஷான மற்றும் சுத்தமான காற்று கிடைக்கும். மேலும், வீட்டிற்குள் இருக்கும் காற்றில் கலந்துள்ள நுண்ணுயிரிகள் வெளியேறும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
Tips to avoid air pollution

வீட்டை சுத்தமாக வைக்கவும்: அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்வதன் மூலமாக தேவையில்லாத அழுக்கு மற்றும் தூசுகளில் இருந்து விடுபட்டு வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். வீட்டில் உள்ள மேற்பரப்புகளை தூசு தட்டுவது வீட்டில் உள்ள காற்றின் தரத்தை அதிகரிக்கும்.

ஏர் பியூரிஃபயர்களைப் பயன்படுத்தவும்: மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களோடு சேர்த்து நீங்கள் ஏர் பியூரிஃபயர்களையும் பயன்படுத்தலாம். ஏர் பியூரிஃபயரை வீட்டின் ஹால் அல்லது பெட்ரூமில் வைக்கும்போது அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மைப்படுத்தப்பட்டு உங்களுக்கு சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று கிடைக்கும். மேலும், நல்ல தரமான GEPA ஃபில்டர்கள் கொண்ட ஏர் பியூரிஃபயர்களை வாங்குங்கள். இது காற்றில் உள்ள மாசுபடுத்திகள், அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டி நமக்குக் கொடுக்கும். உங்கள் வீடு மாசு அடையாமல் இருக்க நல்ல யோசனைகள்தானே இவை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com