குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!

Foods suitable for winter
Foods suitable for winter
Published on

குளிர்காலத்தில் உடலின் ஆற்றல் அளவு குறைந்து மந்தமான உணர்வு ஏற்படும். அதற்காக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாகும் 6 உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. கீரைகள்: கீரை, கோஸ் போன்றவற்றில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி  உற்பத்தியை அதிகரிக்கும் நரம்பியக்கடத்தியான 'செரோட்டின்' மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன.

2. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுவதோடு, இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், குளிர்காலத்தில் ஏற்படும் பருவகால நோய்த் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாத்து, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

3. ஒமேகா 3 அமிலங்களுக்கான கொழுப்பு மீன்: சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து மனநிலையை சுறுசுறுப்பாக்குவதோடு, கவலை மற்றும் மனச்சோர்வுக் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைப்பதால் இந்த மீனை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

4. புளித்த உணவுகள்: தயிர், மோர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை மேம்படுத்தும். இந்த புரோபயாடிக் உணவுகள் வயிறை நன்றாக வைத்திருக்கின்றன. மேலும், உடல் எடை அதிகரிப்பைத் தடுத்து சுறுசுறுப்பான மனநிலையை உண்டாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கடல் பாலூட்டிகளான துருவக் கரடிகளைப் பற்றிய சுவையான 10 தகவல்கள்!
Foods suitable for winter

5. கொட்டைகள் மற்றும் விதைகளிலிருந்து மெக்னீசியம்: வால்நட்ஸ், பாதாம், பூசணி விதைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், உடலின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுவதோடு, மக்னீசியம் உடலை இலகுவாகவும் தளர்வாகவும் உணர வைத்து, குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வைப் போக்குகின்றன.

6. காய்கறிகள்: பீட்ரூட், கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலுக்கு நல்ல ஆற்றலைத் தருவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.

மேற்கூறிய ஆறு உணவு வகைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com