வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்!

வாடகை வீடு
வாடகை வீடு
Published on

சொந்த வீட்டில் வசிப்பவர்களை விட, தற்போது வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பொறுப்புகளும் சுமைகளும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, வீட்டின் உரிமையாளர்களுடன் சுமூகமான உறவு என்பது மிகவும் முக்கியம். வாடகை வீட்டில் குடியிருப்போர் எந்தெந்த விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொண்டால் சுமூகமாக வாழ்க்கையை நடத்தலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. அவசியமின்றி உரிமையாளர் வீட்டுக்குள் அனுமதியின்றி நுழையாதீர்கள்.

2. முக்கியமாக, அவர்களின் குடும்பப் பிரச்னைக்குள் தானாகப் போய் தலையிடாதீர்கள்.

3. போகும்போதும் வரும்போதும் நமது கதவை மட்டுமல்ல, ‘கேட்’டிருந்தால் நிச்சயம் அதையும் மூடி தாழிட்டு விட்டே வர வேண்டும்.

4. குப்பைகளை வெளியில் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். வீட்டின் முன்னே சுத்தமாக வைத்துக்கொள்வது வீட்டு உரிமையாளரை மகிழ்விக்கும்.

5. முக்கியமான நாள் மற்றும் பண்டிகை என்றால் நம் வீட்டில் செய்யும் விசேஷ பலகாரங்களை வீட்டு உரிமையாளருக்கும் பகிர்ந்து கொடுப்பது நல்லுறவை வளர்க்கும்.

6. முக்கியமாக, வாடகை பணத்தை அவர்கள் சொல்லும் தேதிக்குள் அவர்கள் கேட்கும் முன்பே நாமே கொண்டு போய் கொடுப்பது நல்லது.

7. வீட்டு உரிமையாளர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களாக இருந்தால் நாம் முகம் சுளிக்காமல் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

8. நமக்கு உறவினர்கள் அதிகம் இருந்தால் அவர்கள் அடிக்கடி வருவார்கள் என்பதை வீட்டு உரிமையாளரிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

9. நைட் லேம்ப் எரியவில்லை, பைப்பில் தண்ணீர் வரவில்லை போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளை நாமே சரி செய்து கொள்வதுதான் நல்லது. இல்லையெனில் உரிமையாளர் கடுப்பாகி பெரிய பிரச்னைகளை நம்மிடமே விட்டுவிடுவார்.

10. நம் வீட்டுக்குள் எந்தப் பிரச்னை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வீட்டை விட்டு வெளியே வரும்போது உரிமையாளரைப் பார்த்து சிரிப்பு ஒன்றை உதிர்க்க வேண்டும். ஏனெனில், நமது முகவாட்டம் அவரைப் பற்றியது என அவர் எண்ண வாய்ப்பு உண்டு.

11. இருவர் வீட்டிலும் ஒரே பணிப்பெண் என்ற சூழ்நிலை இருந்தால் நிச்சயமாக பணிப்பெண்ணிடம் அவர்களைப் பற்றிய விவாதங்கள் கூடாது.

12. குடியிருக்கும் வீடு, நாம் வாடகை தருவதனால் மட்டும் நமக்கு சொந்தமாகி விடாது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். வண்டிகளை குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
‘டோஃபு ரொம்ப டாப்பு’ என சைவ உணவுப் பிரியர்கள் கொண்டாடுவதன் ரகசியம் தெரியுமா?
வாடகை வீடு

13. முக்கியமாக, அட்வான்ஸ், வாடகைப் பணம், எந்தத் தேதிக்குள் தர வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை டாக்குமெண்டாக அக்ரீமெண்ட் போட்டுக் கொள்வது இருவருக்கும் நல்லது. வெறும் வாய் வார்த்தைகள் ஏதேனும் கசப்புகள் நேரும்போது உதவாது.

14. நாம் குடியிருக்கும் வரை அந்த வீடு நம் கண்காணிப்பில் என்பதை மனதில் கொண்டு வீட்டினை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு.

15. பார்த்து பார்த்து கட்டிய வீடு என்பதால் சில உரிமையாளர்கள் ஆணிகள் அடிக்க மறுப்பார்கள். அவற்றை நாமும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் இருவருமே சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போனால் மட்டுமே வாடகை வீடும் சந்தோஷத்தைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com