விமானப் பயணம் பாதுகாப்பாய் இருக்க சில முக்கிய குறிப்புகள்!

Flight Travel
Flight TravelFlight Travel
Published on

விரைவாகவும், வசதியாகவும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல விமானப் பயணமே சிறந்த வழி. இருப்பினும், சிலருக்கு விமானப் பயணம் என்பது சற்றுப் பதற்றமானதாக இருக்கலாம். பொதுவாக, விமானப் பயணம் மிகவும் பாதுகாப்பானதுதான். 

ஆனால், நாம் சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது, நமது பயணத்தை மேலும் பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும் மாற்ற உதவும். விமானத்தில் பயணிக்கும்போது நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பாதுகாப்பு விளக்கங்களை கவனியுங்கள்: விமானம் புறப்படுவதற்கு முன், விமானப் பணிப்பெண்கள் அல்லது திரையில் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை அளிப்பார்கள். இது சலிப்பாகத் தோன்றினாலும், உங்கள் இருக்கை, உயிர் காக்கும் உடை, ஆக்ஸிஜன் மாஸ்க், அவசரகால வெளியேறும் வழிகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட் அணிவது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் இதில் இருக்கும். அவற்றை கவனமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

2. பாதுகாப்பு பெல்ட்டை அணியுங்கள்: விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும், மற்றும் "பாதுகாப்பு பெல்ட் கட்டவும்" என்ற சிக்னல் இருக்கும்போதும் கட்டாயம் பெல்ட் அணியுங்கள். எதிர்பாராத Turbulence ஏற்படும்போது இது உங்களைப் பாதுகாக்கும். இருக்கையில் அமர்ந்திருக்கும்போது முடிந்தவரை பெல்ட்டை அணிந்தே இருப்பது நல்லது.

3. அவசரகால வெளியேறும் வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்: உங்கள் இருக்கையில் இருந்து மிக அருகில் உள்ள அவசரகால வெளியேறும் வழி எங்குள்ளது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் இருக்கைக்கு முன்னால் இருக்கிறதா அல்லது பின்னால் இருக்கிறதா என்று கணக்கிடுங்கள். அவசரகாலத்தில் மின்சாரம் தடைபடும்போது, வெளிச்ச அடையாளங்கள் உங்களை வழிநடத்தும்.

4. ஆக்ஸிஜன் மாஸ்க்கின் பயன்பாடு: விமானத்தில் காற்றழுத்தம் குறைந்தால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாகவே கீழே வரும். முதலில் உங்கள் மாஸ்க்கை அணிந்து, பின்னர் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சிலர் முதலில் குழந்தைக்கு மாஸ்க் போடுவார்கள், ஆனால் நீங்கள் சுயநினைவுடன் இருக்க முதலில் உங்களுக்குப் பாதுகாப்பளிப்பது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
ஒரு செயலில் ஈடுபட முழு கவனம் செலுத்துங்கள்..!
Flight Travel

5. லக்கேஜ் சேமிப்பில் கவனம்: உங்கள் கைப்பையை தலைக்கு மேலே உள்ள பெட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். அது விழாதவாறு மூடியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கால்களுக்கு அடியில் அல்லது இருக்கையின் அடியில் வைக்கும் பொருட்கள் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. கனமான பொருட்களைத் தலைக்கு மேலே வைப்பதைத் தவிர்க்கவும்.

6. மின்னணு சாதனங்களின் பயன்பாடு: விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும், உங்கள் மொபைல் போன் மற்றும் மற்ற மின்னணு சாதனங்களை 'ஃப்ளைட் மோடில்' (Flight Mode) வைக்க வேண்டும். இது விமானத்தின் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்கும்.

விமானப் பயணம் பொதுவாக மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனால், சில சமயங்களில் ஏற்படும் எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்க நாம் தயாராக இருப்பது அவசியம். இந்த எளிய பாதுகாப்பு குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்வது, உங்கள் விமானப் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாகவும், மன அழுத்தமில்லாமலும் மாற்ற உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com