

இப்போதெல்லாம் அனைத்து வயதினரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பம்பரம் போல் சுழன்று கொண்டிருப்பதால் வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இன்னும் ஒரு சிலருக்கோ அவர்களின் உடம்பு அதற்கு வளைந்து கொடுப்பதில்லை. அதை பூர்த்தி செய்ய என்ன வழி இருக்கிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
வீடு பராமரிப்பு சேவையை வழங்கும் ஆப்ஸ்:
இந்தியாவில் பல நிறுவனங்கள் தரமான வீட்டு பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.
இவற்றுள் அர்பன் கம்பெனி (Urban Company), நோப்ரோக்கர் (NoBroker), ஹவுஸ் ஜாய் (Housejoy), ஹைகேர் (HiCare), ப்ரோ4யு (Bro4u), நாக்மேன் (Knockman), ஹோம் ட்ரையாங்கிள் (Home Triangle), டைம் ஷேவர்ஸ் (Timesaverz), ஹெல்பர் (Helpr) மற்றும் குயிக்கர் ஈஸி (Quikr Easy) ஆகியவை சிறந்த நிறுவனங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இவை சுத்தம் செய்தல் (Cleaning), பிளம்பிங், மின் பழுதுபார்ப்பு (Electrical repairs), பூச்சி கட்டுப்பாடு (Pest control) மற்றும் மின் சாதன பராமரிப்பு (Electrical Appliance maintenance) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.
இதில் அர்பன் கம்பெனி, அதன் சிறந்த சேவை மற்றும் சிறந்த பயனர் அனுபவங்கள் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. NoBroker அதன் ஆரம்பகட்டத்தில் ரியல் எஸ்டேட் சேவைகளுக்காக அறியப்பட்டது. இப்போது சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் சேவை போன்ற வீட்டு பராமரிப்புகளையும் சேர்த்து வழங்கிக் வருகிறது.
இதேபோல் மேலே கூறப்பட்ட மற்ற நிறுவனங்களும் அவரவர்களின் பாணியில் சிறந்த சேவைகளை தருகின்றன.
எந்த சேவைதில் இவர்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர்?
பயனர்களின் தரவுகளின் படி, அர்பன் கம்பெனி அதன் சேவைத் தரம் மற்றும் நிபுணத்துவம் (Professionalism) ஆகியவற்றிற்காக தொடர்ந்து அதிக பாராட்டுகளைப் பயனர்களிடம் பெற்று வருகிறது.
NoBroker அதன் வாடிக்கையாளர் சேவையில் உயர்வாக மதிப்பிடப்படுகிறது.
ஹவுஸ் ஜாய் மற்றும் ஹைகேர் ஆகியவை பூச்சி கட்டுப்பாடு மற்றும் நிறைவான சுத்தம் செய்தல் (Deep cleaning) போன்ற சேவைகளுக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன.
Bro4u அதன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான தகவல் தொடர்புக்காக பாராட்டப்படுகிறது.
நாக்மேன் அதன் நெகிழ்வான முன்பதிவு சேவைக்காக (Flexible booking options) அறியப்படுகிறது.
இதேபோல் HomeTriangle, Timesaverz, Helpr மற்றும் QuikrEasy ஆகியவை அவற்றின் பலதரப்பட்ட சேவை வழங்குதல் மற்றும் சிறந்த பயனர் தொடர்புக்காக (User-friendly interface) உபயோகிக்கப்படுகின்றன.
இந்த சேவைகளை பயன்படுத்துவதற்கு முன் செய்ய வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?
இந்த சேவைகளை பயன்படுத்தி ஒரு சுமூகமான அனுபவத்தை உறுதிப்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
முதலாவதாக சேவை வழங்குனர்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் பின்னணியைச் சரிபார்த்து அவர்கள் தகுதியானவர்கள் மற்றும் நம்பகமானவர்களா? என்பதை உங்கள் திருப்திக்காக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிற பயனர்கள் கொடுத்த மதிப்பீடுகளை (Reviews) தெரிந்து கொள்வதன் மூலம் அந்த சேவை பற்றிய நுண்ணறிவுகளை பெற முடியும்.
கூடுதலாக, எந்த வேலைக்கு நீங்கள் அவர்களை அணுகிறீர்கள் மற்றும் அதன் விலை விவரங்களை முன்கூட்டியே நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
சலசலப்பு இல்லாத நேரங்களில் (Off-peak hours) இதை சேவைகளைத் திட்டமிடுவது இதற்காக வருபவர்களை உங்களால் சுலபமாக நிர்வகிக்க முடியும்.
இறுதியாக நீங்கள் மறுபடியும் அதே நிறுவன சேவைகளை பின்னாளில் உபயோகிக்கப் போகிறீர்கள் என்றால் அவர்களின் செயல்திறனைக் கண்காணித்து அதில் வரும் தவறுகளை அடுத்த முறை நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக, மேலே குறிப்பிட்ட இந்த சேவைகளை நம் சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தி நம் வாழ்விடத்தையும், நம் ஆற்றலையும் காத்து மன நிம்மதியோடு வாழ்வோம்.