அதிகமான கொசுத் தொல்லையைப் போக்க சில இயற்கை வழிமுறைகள்!

Mosquito
Mosquito
Published on

இந்த கொசுத் தொல்லை காலம்காலமாக நீடித்து வரும் ஒரு பெரிய தொல்லையாகவுள்ளது. மழைக்காலங்களில் மட்டும்தான் கொசு அதிகமாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் கோடைக்காலத்திலும் கூட கொசுத் தொல்லை அதிகமாகத்தான் இருக்கிறது.

கொசு கடிப்பதால் என்னென்ன நோய்கள் வரும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். கொசுவர்த்தி, ஆல்அவுட் போன்றவற்றை வாங்கி வைத்தால் கொசு தொல்லை நீங்கிவிடும் என்று நாம் நினைப்போம். ஆனால் கொசு போகாது, நமக்கு மூச்சுதான் திணரும். இதனால் சுவாச கோளாறுகளும் ஏற்படுகின்றன.

பூண்டு:

பூண்டுப் பற்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். அதனை வடிக்கட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு வீடு முழுவதும் தெளித்துவிட வேண்டும். ஏனெனில், பூண்டில் உள்ள சல்பரின் வாசனை பொதுவாகவே பூச்சிகளுக்குப் பிடிக்காது. ஆகையால் கொசுத் தொல்லையும் நீங்கும்.

காபி தூள்:

காபி தூளுடன் எதுவுமே சேர்க்கத் தேவையில்லை. அதனை வீட்டின் அருகே இருக்கும் நீர் தேக்கம் மற்றும் அதிக கொசுக்கள் உருவாகும் இடங்களில் காபி தூளை மட்டும் தூவிவிட்டாலே போதும், கொசு பெருகுவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை கிராம்பு:

இதனை கொசுக்கள் நுழையும் இடங்களில் வைத்தால் கொசு வீட்டிற்குள்ளேயே நுழையாது. முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் இருப்பக்கமும் கிராம்புகள் சொருவி கொசுக்கள் நுழையும் இடங்களில் வைக்க வேண்டும்.

கற்பூரம்:

கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு கற்பூரம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஜன்னல் அருகே, கொசு நுழையும் இடங்களில் கற்பூரம் ஏற்றலாம். அல்லது ஆங்காங்கே பவுல்களில் நீர் உற்றி அதில் கற்பூரம் போட்டு வைக்கலாம்.

துளசி இலைகள்:

மருத்துவ குணமும் நல்ல வாசனையையும் கொண்ட துளசியை கொசுக்களை விரட்டப் பயன்படுத்தலாம். துளசிச் செடிகளை வீட்டைச் சுற்றி வையுங்கள். அப்படியில்லை என்றால் துளசி இலைகளை நசுக்கி கொசு நுழையும் இடங்களிலும் அதிகமாக இருக்கும் இடங்களிலும் வையுங்கள். ஏனெனில் இந்த வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
மற்றவர் மனதைக் கவர இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Mosquito

புதினா:

புதினாவின் வாசனையும் கொசுக்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆகையால் அதனை ஒரு பவுலில் போட்டு அறைகளில் வைக்கலாம். அல்லது புதினா எண்ணெயை ஆங்காங்கே தெளித்துவிடலாம். இதனால் கொசுத் தொல்லைகளை முற்றிலுமாகப் போக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com