படுத்தவுடன் தூக்கம் வர சில எளிய பயிற்சிகள்!

Some simple exercises to get sleepy after lying down
Some simple exercises to get sleepy after lying downhttps://www.viduthalai.page

ளர்ந்து வரும் இந்தத் தொழில்நூட்பத்தில் தூக்கமின்மை  என்பது ஒரு மிக பெரிய பிரச்னையாக உள்ளது. வேலை செய்து விட்டு சோர்வாக வந்து படுத்தால் தூக்கம் தானாகவே வந்த காலம் மாறி, இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலேயே வேலை செய்வதாலோ அல்லது செல்போனில் விளையாட்டுகளைப் பார்த்துக்கொண்டே இருப்பதாலோ நேரம் போவது கூட தெரியாமல் நிறைய இளம் தலைமுறையினர் தூக்கம் என்பதையே மறந்து போகிறார்கள். இப்பிரச்னையை போக்க சுலபமான முறையில் தூக்கத்தை வர வழைப்பது எப்படி என்ற வழிமுறைகளைப் பார்ப்போம்.

தூங்குவதற்கு முதலில் அட்டவணை போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தூங்கும் நேரம் குறைந்தது எட்டு மணி நேரமாவது இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான தூக்கமாகும். எனவே, அந்த அட்டவணைபடி தினமும் சரியாக தூங்கப் பழகுங்கள்.

என்ன சாப்பிடுகிறோம்? எவ்வளவு சாப்பிடுகிறோம்? என்பதில் கவனம் தேவை. இரவு தூங்க செல்லும் முன்பு அதிகமாக சாப்பிடுவதும் தவறு, எதுவும் சாப்பிடாமல் தூங்க போவதும் தவறு.

தூங்குவதற்கு கண்டிப்பாக ஒரு அமைதியான சூழல் இருக்க வேண்டும். சத்தமாக இருக்கும் இடத்தில் தூக்கம் கெட்டுப்போகும். எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்.

மதியம் தூங்கும் பழக்கம் இருக்குமாயின் இரவில் தூக்கம் தடைப்படும். எனவே மதியம் தூங்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

அதிகமாக கவலைப்படுவது கூட தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கையை நினைத்தும், நடந்ததையும், நடக்கப்போவதையும் இரவு நேரத்தில் அசைப்போடுவதைத் தவிர்க்கவும்.

தினசரி வாழ்வில் உடற்பயிற்சிக்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

இராணுவ வீரர்கள் தூங்குவதற்கு கடைப்பிடிக்கும் முறை:

முகத்தில் உள்ள தசைகளை தளர்த்தி ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். கைகளை இருபக்கமும் தளர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்து விட்டு இப்போது மார்பை தளர்வாக வைத்து கொள்ளுங்கள். தொடை, கால் பகுதிகளையும் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மொத்த உடலும் தளர்வாகவும் லேசாகவும் உணரும் தருணத்தில் மனதில் ஏதேனும் அமைதியான இயற்கை காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்து பாருங்கள் பத்து வினாடிகளுக்குள் தூக்கம் வந்து விடும். இது இரண்டாம் உலக போரில் யூ.எஸ்.ஏ பைலட்கள் தூங்குவதற்காக பயன்படுத்திய முறையாகும்.

நன்றாக தூக்கம் வருவதற்கு 4 7 8 டெக்னிக்:

4 7 8 டெக்னிக் என்பது என்னவென்றால், நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த பிராணாயாமா முறையாகும். இந்த மூச்சு பயிற்சியை செய்யும்போது சீக்கிரம் தூக்கம் வரும்.

படுக்கைக்குப் போகும் முன்போ அல்லது படுக்கையில் ரிலாக்ஸாக படுத்து கொண்டோ இந்த பயிற்சியை செய்யலாம். இதை செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாக்கு பகுதி வாயின் மேற்பகுதியை தொட்டுக் கொண்டிருப்பது போல பார்த்து கொள்ளவும். வாயின் வழியே மூச்சு விடும்போது, ‘உஷ்’ சத்தத்துடன் விடவும். இப்போது வாயை மூடி மூச்சை இழுத்துக் கொள்ளவும். மனதிலே நான்கு வரும் வரை எண்ணிக்கொண்டு இழுக்கவும்.

இப்போது மூச்சை ஏழு எண்ணும் வரை பிடித்துக் கொள்ளவும். இப்போது பிடித்து வைத்த காற்றை வாய் வழியாக, ‘உஷ்’ சத்தத்துடன் எட்டு என்ற எண்ணிக்கையில் விடவும்.

இந்த செயல்முறையை மூன்று முறை செய்யவும். இந்த செயல்முறையில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், 4 7 8 என்ற எண்ணிக்கையில் செய்வதேயாகும்.

இதையும் படியுங்கள்:
முள் சீத்தா பழத்திலிருக்கும் முழுமையான ஆரோக்கிய நன்மைகள்!
Some simple exercises to get sleepy after lying down

அமைதியாக தூங்க சில வழிமுறைகள்:

உங்களுக்குப் பிடித்த இசையை கேட்கவும். கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக படுத்து இயற்கையான சூழலை நினைத்து பாருங்கள். புத்தகம் படிக்க முயற்சியுங்கள். முக்கியமாக செல்போன், லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதை நிறுத்தவும்.

தூக்கம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நன்றாக தூங்கினால் மட்டுமே அடுத்த நாள் சுறுசுறுப்பாக வேலையை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மன நிம்மதிக்கும் புத்துணர்ச்சிக்கும் தூக்கம் இன்றியமையாததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com