வீட்டு உபயோகப் பொருட்கள் பளீரென மின்ன சில எளிய ஆலோசனைகள்!

பாத்திரங்கள் பளபளக்க
பாத்திரங்கள் பளபளக்க
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே வீட்டின் மற்ற பொருட்களை பளிச்சிட வைக்கலாம். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

* கோதுமை தவிட்டுடன் காபி தூளை கலந்து பாத்திரங்களைத் தேய்த்தால் கருமையான பாத்திரங்கள் பளபளப்பாகக் காட்சி தரும்.

* பயன்படுத்திய தேயிலையைக் கொண்டு கண்ணாடியை தேய்த்துத் துடைத்தால் கண்ணாடி பளீச்சென்று இருக்கும்.

* பிரம்பால் செய்த பொருட்களை எலுமிச்சை சாறு கொண்டு தேய்த்து சுத்தம் செய்தால் அவை அனைத்தும் பளபளக்கும்.

* துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி இவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் துரு போய் பளீச்சென இருக்கும்.

* பாலிஷ் செய்யப்பட்ட மரச்சாமான்களின் மேல் உள்ள கறையைப் போக்க சிறிதளவு தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் வினிகரை கலந்து துடைத்தால் மரச் சாமான்கள் புதிது போல் காணப்படும்.

* கண்ணாடிகளை ஒரு துண்டு உருளைக்கிழங்கை கொண்டு நன்கு தேய்த்து துடைத்தால் கண்ணாடி சுத்தமாகி பளபளக்கும்.

* வீட்டில் உள்ள காலாவதியான ஆயின்மெண்டுகளை தூக்கி எறியாமல், ஷூக்களின் மேல் நன்கு தடவி அழுத்தி தேய்த்தால் ஷூ பளீச்சென ஆகும்.

* பிளாஸ்டிக் வாளி, மக்கு சுத்தம் செய்ய சோப்பு, மண்ணெண்ணெய், உப்பு மூன்றையும் சம அளவாக கலந்து உள்ளேயும் வெளியேயும் பூசி 5 நிமிடத்திற்கு பிறகு வெயிலில் வைத்து கழுவினால் பளபளப்புடன் ஜொலிக்கும்.

இதையும் படியுங்கள்:
லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்துபவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!
பாத்திரங்கள் பளபளக்க

* திரைச்சீலைகளை மாட்டும் பித்தளை வளையங்களை வினிகர் கலந்த நீரில் நன்கு கொதிக்க வைத்தால் பளபளவென்று ஆகிவிடும்.

* மெல்லிய டிஷ்யூ மற்றும் செய்தித்தாள்களால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும்.

* தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் மேல் படிந்திருக்கும் பச்சை நிறத்தை போக்க வினிகரையும் உப்பையும் கலந்து நன்கு தேய்த்தால் பளபளப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com