விசேஷ நாளில் நீங்கள் அணியும் நகைகள் மின்னிட சில எளிய வழிகள்!

some simple ways to make jewelry sparkle
some simple ways to make jewelry sparkle
Published on

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்து அதைக் கொண்டாடுவோம். அப்படிக் கொண்டாடும் வேளையில் பெண்களுக்கே உரிய அணிகலன்கள் (நகைகள்) அணிந்தால்தான் அழகு. உங்கள் வீட்டில் இருக்கும் பாரம்பரியமிக்க நகைகளை சேதாரம் இல்லாமல் எப்படி சுத்தம் செய்வது? விழா காலங்களில் பளிச்சென்று நகையை எப்படி அணிவது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தங்க நகைகளின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஆனால், அதன் பராமரிப்பின் மீதும் அக்கறை கொள்வது அவசியமானது. நகையை சுத்தம் செய்வது என்பது, நகை பராமரிப்பில் முக்கியமான வழி முறை. தங்கம் மட்டுமல்லாமல், வைர நகைகளையும் வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்யலாம்.

வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், காதணிகள் போன்ற தங்க நகைகளை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பூ சேர்த்துக் கலக்கி, அந்த நீரில் நகைகளை ஊறவைக்கவும். பேபி டூத் பிரஷ் போல சாஃப்ட் பிரஷ் கொண்டு, நகைகளை மெதுவாகத் தேய்க்கவும். நகைகளின் இடைவெளில் உள்ள அழுக்கை நீக்க பிரஷை மெதுவாக அங்கு தேய்க்கவும். அழுத்தி தேய்த்தால் நகையின் டிசைன்கள் பழுதாகலாம் என்பதால் மிக கவனமாக மென்மையாக தேய்க்க வேண்டும்.

நகைகளை தண்ணீரில் சுத்தம் செய்து அலசிய பின்னர், உலர வைக்க அவற்றை டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் அல்லது காட்டன் போன்றவற்றின் மீது வைக்க வேண்டாம். அது நகைகளில் ஸ்கிராட்ச் ஏற்படுத்தலாம் அல்லது பளபளப்பைக் குறைக்கலாம். எனவே,பருத்தித் துணியை விரித்து வைத்து நகைகளை உலர வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
அன்றாடப் பணிகளை மன அழுத்தமின்றி செய்ய அவசியமான ஆலோசனைகள்!
some simple ways to make jewelry sparkle

பிறகு அந்தந்த நகைகளை அதற்குரிய டப்பாக்களில் வைக்கவும். செயின், மாலை போன்றவை மடங்காமல், கம்மல் அழுந்தாமல், நகைக்கு எந்த வகையிலும் அழுத்தம் ஏற்ப டாத வகையில் நகை டப்பாக்களில் வைக்க வேண்டியது மிக மிக முக்கியம். வைர நகைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்யாமல் விட்டால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். எனவே, வைர நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

வைர நகைகளை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும் (நீரில் எதுவும் கலக்க வேண்டாம்). சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அந்நீரில் நகையை ஊற வைக்கவும். பிறகு மென்மையான பிரஷ் கொண்டு வைர நகையை தேய்க்கவும். பின்னர் வெதுவெ துப்பான நீரில் மீண்டும் அலசவும். பருத்தித் துணியில் நகையை உலர வைத்து நகை டப்பாவில் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com