ஃபிளாஸ்க் பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்!

Some Tips for Flask maintanance!
Some Tips for Flask maintanance!https://www.gacnagpur.org

பொதுவாக, புதிதாகக் குழந்தை பிறந்தபொழுது ஃபிளாஸ்கை பயன்படுத்துவோம். அதன் பிறகு மெல்ல மெல்ல அதை எடுத்து உள்ளே வைத்து விடுவோம். பிறகு தேவைப்படும்பொழுது திடீரென்று எடுத்துப் பார்த்தால் அதை உபயோகப்படுத்த முடியாதபடி இருக்கும். ஃபிளாஸ்க்கை நன்றாகப் பராமரித்து வைத்துக் கொண்டால் எப்பொழுதும் அதைப் புழங்குவதற்கு வசதியாக இருக்கும். அதனைப் பற்றிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

எந்த ஒரு பானத்தையும் ஃபிளாஸ்க்கில் ஊற்றி வைக்கும் முன்பு சமையல் சோடா கலந்த நீர் விட்டு, பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

ஃபிளாஸ்க்கில் சூடான பானம் நிரப்பும்போது சர்க்கரை சேர்க்கக் கூடாது. பால் கொதித்ததும் நிரப்ப வேண்டும்.

பாட்டில்கள் கழுவும் கம்பியுடன் கூடிய பிரஷை உபயோகித்தால் ஃபிளாஸ்க் உடைந்துவிடும். திட உணவுப் பொருட்களை வைத்து காலியானதும் உடனே கொதி நீரை உள்ளே விட்டு சிறிது நேரம் வைத்த பிறகுதான் ஃபிளாஸ்க்கை அலம்பி சுத்தம் செய்ய வேண்டும்.

ஃபிளாஸ்க்கை கழுவியதும் அதை தலைகீழாகக் கவிழ்த்து ஐந்து நிமிடம் வைத்து உள்ளே இருக்கும் நீரை வடிய விட்டே பிறகே எடுத்து வைக்க வேண்டும்.

ஃபிளாஸ்க்கில் ஐஸ் வைப்பதானால் ஐஸ்ஸை தூளாக்கிய பின்பே வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மண்பானை குடிநீரில் இத்தனை நன்மைகளா?
Some Tips for Flask maintanance!

சூடான பானத்தை ஊற்றும்போது ஃபிளாஸ்க்கின் கழுத்து வரை நிரப்பாமல் சிறிது இடம் காலியாக விடுவது அவசியம்.

ஃபிளாஸ்க்கை  கழுவும்போது பைப்புக்கு அடியில் நட்டமாக வைத்து நீரை அதற்குள் திறந்து விடக்கூடாது.

பயன்படுத்தாத நேரத்தில் ஃப்ளாஸ்க்கை திறந்தே வைத்திருப்பது நல்லது.

அடிக்கடி ஃப்ளாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com