
அலுவலகத்திலோ அல்லது அலுவலக விஷயமாக செல்லும் போதோ மீட்டிங் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. இதுப்போன்ற மீட்டிங்கில் எப்படி பேசுவது, எதை முதலில் சொல்வது, எப்போது குறிக்கிட்டு கேள்வி கேட்பது போன்ற பல ப்ரோடோகால் இருக்கும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.எதை பற்றி பேசுவது?
மீட்டிங்கிற்கு பதற்றத்துடன் தயார் செய்து போகும் போது எங்கோ ஆரம்பித்து, எங்கோ முடிக்கும்படி ஆகிவிடும். அதை தவிர்க்க மீட்டிங் செல்வதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு பேசவேண்டியதை வரிசைப்படுத்தி ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மீட்டிங்கில் பேசும் போது நம்பிக்கையுடன் பேசுங்கள். உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் எளிமையாக பதிலளியுங்கள்.
2. 80:20 ரூல்.
மீட்டிங்கில் 80:20 ரூல்லை கடைப்பிடியுங்கள். நாம் பேசும் 20 சதவீத கருத்து 80 சதவீத பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதாவது குறைவாக பேசி உங்கள் கருத்தை அதிகமாக விவாதிக்க வைக்க வேண்டும்.
3. கவனம் செலுத்துங்கள்.
மீட்டிங்கில் ஏதோ பேருக்கென்று உட்கார்ந்திருக்காமல் அடுத்தவர்கள் பேசுவதில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் உங்களுக்கு தேவையானது ஏதாவது இருக்கலாம். இவ்வாறு நீங்கள் அடுத்தவர்கள் பேசுவதை கவனிக்கும் போது அது உங்களுக்கும் உதவியாக இருக்கும்.
4. பேசும்போது குறிக்கிடலாமா?
ஒருவர் பேசும்போது நடுவில் குறிக்கிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால், தவறான கருத்தை முன்வைக்கும் போது அங்கே குறிக்கீடு செய்வதில் தவறில்லை. அவர்கள் பேசுவதில் இருக்கும் பிழையை சுட்டிக்காட்டுவது நல்லது. அடுத்தவர்கள் சொல்லுவார்கள் என்று அமைதியாக இருப்பதை விட தானாக முன்வந்து சொல்வதை அனைவரும் விரும்புவார்கள்.
5.செல்போனை தவிர்க்கவும்.
பெரும்பாலும் மீட்டிங்கில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. கான்பிரன்ஸ் ஹாலில் போன் பயன்படுத்தும் போது உங்கள் மீது இருக்கும் நல்ல அபிப்பிராயம் குறைந்துவிடும். அதனால் பொதுவாக மீட்டிங்கில் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
அடுத்தமுறை மீட்டிங் செல்லும் போது இந்த டிப்ஸையெல்லாம் ஃபாலோ பண்ணி அசத்துங்கள்.