
பிரேக் பேடிலிருந்து வரும் ஒரு சில சத்தத்தால், கார் பிரேக் பழுதடைத்துள்ளது என்பதை, தெரிந்து கொண்டு சர்வீஸ் செய்ய வேண்டும். சில சமயங்களில் பிரேக் லிவர் ஜாம் ஆகி, திடீரென பிரேக் மாஸ்டர் சிலிண்டர் கசிந்து, பிரேக்குகளுக்கு தேவையான அழுத்தம் கிடைக்காது. எனவே முறையே பழுதை நீக்க வேண்டும்.
பவர் அசிஸ்ட் பிரேக் பொதுவாக உள்ள கார்களில் கடினமாக பிரேக்கை அழுத்தினால் பிரேக் பிடிக்காமல் போகும், பெரும்பாலும் மலை ஏற்றங்களிலும் இறக்கங்களிலும் இந்த பிரச்சனைகள் அடிக்கடி வரலாம். இதனை கவனத்தில் கொண்டு உடனே பழுது பார்க்க வேண்டும்.
காரில் பிரேக் பிடிக்காது என தெரிந்தவுடன் காரின் கியர்களை குறைக்க முயற்சி செய்யவும். இதனால் காரின் ஆர்பிஎம்மை ஏறவிடாமல் தடுத்து ஒவ்வொரு கியராக குறைக்கும் போது, உங்கள் காரில் இன்ஜின் பிரேக்கிங் ஏற்பட்டு வாகனத்தின் வேகம் படிப்படியாக குறைந்து விடும்.
கியரை நியூட்ரலுக்கு கொண்டு செல்ல முயற்சிக்க கூடாது, ஏனெனில் கார் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் டிராபிக் நிறைந்த பகுதியிலிருந்து டிராபிக் இல்லாத லையனுக்கு மாறி பின்னால் வருபவர்களை கவனித்து சிக்னல் செய்ய வேண்டும்.
இச்சூழ்நிலையில், வாகனத்தின் ஏர் கண்டிஷனை இயக்க வேண்டும். இது இயந்திரத்தின் அழுத்தத்தை அதிகரித்து காரின் வேகத்தை சிறிது குறைத்துவிடும்.
மணல் அல்லது மண் குவியல் அருகில் இருந்தால், ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்தி மணல் அல்லது மணல் திட்டு மீது காரை செலுத்தினால் காரின் வேகத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.
ஆட்டோ கியர் கார்களில் மெனுவல் மோடு இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும், காரை மெனுவல் கியருக்கு மாற்றி பெடல் ஸிப்டர் மூலம் காரின் கியரை குறைக்க முடியும்.
காரின் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து 20 கி.மீ. வேகத்திற்கும் குறைவாக கொண்டு வந்துவிட்டால் மெதுவாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து காரை நிறுத்தலாம்.
திடீரென ஹேண்ட் பிரேக் பயன்படுத்துவதால், பின்புற சக்கரங்கள் லாக் ஆகி கார் கவிழவும் வாய்ப்புள்ளது.
இதனை பின்பற்றினால் ஆபத்தை தடுக்க முடியும்.