

ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்க கூடாது. புகைப்பட்டு நிறம் போய்விடும்.
ஃபிரிட்ஜை வீட்டில் வைக்கும் போது சுவரிலிருந்து குறைந்தது முப்பது சென்டிமீட்டர் தூரம் தள்ளி வைத்தால் தான் அது வெப்ப காற்றை வெளியிட வசதியாக இருக்கும்.
வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏசி, அயன் பாக்ஸ், போன்றவற்றுக்கு அருகில் பிரிட்ஜை வைக்கக்கூடாது காரணம் அதன் பாதிப்பால் இது அதிக அளவுக்கு மின்சார சக்தியை இழுக்கும்.
ஃபிரிட்ஜில் உள்ள கன்டென்சர் காயில்மீது அதிக அளவு தூசி படித்தால் அது இயங்குவது கடினமாகும் மிகக் கடினமான மோட்டரை இயக்க மின்சக்தி அதிக அளவு தேவைப்படும். இதை தவிர்க்க கன்டெனசர் காயிலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் படக்கூடாது.
ஃபிரிசரில் உள்ள ஐஸ் கட்டிகள் எடுக்க வரவில்லை என்றால் கத்தியை கொண்டு எடுக்காமல் பழைய காஸ்கட்டை அதன்மேல் போட்டு வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பு வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுகளை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
உள்பகுதியை சுத்தப்படுத்தும் போது கண்டிப்பாக சோப்பை பயன்படுத்தக்கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை பயன்படுத்த வேண்டும்.
ஃபிரிட்ஜை அடிக்கடி திறக்க கூடாது. அப்படி திறந்தாலும் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
ஃபிரிட்ஜை துடைக்கும் போது ஈரத்துணி கொண்டு துடைக்க கூடாது. உலர்ந்த துணியில் துடைக்க வேண்டும்.
வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜை காய வைத்து விட்டு செல்ல வேண்டும். மாதம் இருமுறை ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஐஸ் தட்டுகளை ஒருபோதும் சுடுநீரில் அலம்ப கூடாது.
குளிர்சாதன பெட்டியில் உள்ள கண்ணாடி தகடுகளை உடனடியாக வெந்நீரில் போடக்கூடாது கண்ணாடி விரிசல் ஏற்பட்டு உடைய வாய்ப்பு உள்ளது.
பிரிட்ஜில் இருந்து வித்தியாசமான ஓசை வந்தால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் எடுத்து விட்டே சுத்தம் செய்தால் சுத்தம் செய்வது எளிது.
ஃபிரிட்ஜில் எலுமிச்சை பழத்தை நறுக்கி வைத்தால் கெட்ட வாடை வராது அல்லது சமையல் சோடா, கரித் துண்டு இவற்றையும் வைக்கலாம்.
அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்காமல் ஒவ்வொரு பொருளுக்கும் இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும்.
வாழைப்பழத்தை கண்டிப்பாக வைக்கக் கூடாது.
பச்சை காய்கறிகளை பாலீத்தின் கவர்களில் போட்டு வைக்க வேண்டும். பச்சை மிளகாய் காம்பை எடுத்து விட்டு வைக்க வேண்டும்.
முட்டைகளை ஃபிரிட்ஜில் கூரான பகுதி கீழேயும் அகலமான பகுதி மேல்நோக்கியும் இருக்கும்படி வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.
கொத்தமல்லி கருவேப்பிலை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
தக்காளியை ஒரு வாரத்திற்கு வைக்கலாம். கேரட்டை நன்கு கழுவி தலைப்பாகத்தினை நறுக்கி விட்டு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு இரண்டு வாரம் வைக்கலாம்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்ததும் சூடு படுத்த கூடாது குளிர்ச்சி குறைந்ததும் தான் சூடு படுத்த வேண்டும்.
அடுப்பு அருகிலோ சூரிய வெளிச்சம் படும் இடங்களிலோ வைக்க கூடாது. காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும்.
ஃபிரிஜ்ஜில் காய்கறிகளை ஒரு கெட்டி துணி விரித்து அதில் பச்சை காய்கறிகளை பாதுகாத்தால் வெகு நாட்கள் அழுகாமல் இருக்கும்.
பொரித்த அப்பளம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலீத்தின் கவரில் போட்டு வைக்க வேண்டும்.
கடையில் வாங்கி வரும் முழு முலாம் பழத்தை அப்படியே வைத்தால் சில சத்துக்கள் போய்விடும் நறுக்கிய முலாம்பழத்தினை பாலித்தீன் பைகளில் போட்டு வைக்கலாம்.
அன்னாசி பழம், கிவி பழம், பலாப்பழம், மாங்காய் போன்றவற்றை ஃபிரிஜ்ஜில் வைக்க கூடாது.
வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் போன்றவை காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். அதனால் அவற்றை ஃபிரிஜ்ஜில் வைக்க கூடாது.
தேனையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது.
ஊறுகாய்களை வைக்கலாம் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.