உறவுகள் முறியாமல் நீடித்திருக்க சில ஆலோசனைகள்!

Happy relationships
Happy relationshipshttps://www.lovetoknow.com

மது உறவினர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதேபோல் நாம் அவர்களிடம் நடந்து கொண்டால் பிரச்னை இன்றி உறவு சுமுகமாகத் தொடரும். உறவு நீடிக்க வேண்டுமென்றால் அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்களை தோண்டித் துருவி கேட்டு அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது.

ஒவ்வொரு உறவிலும் ஏதாவது ஒன்றை கொடுக்கவும், ஒன்றைப் பெறவுமே வேண்டி உள்ளது. கொடுக்கல், வாங்கல் சீரான முறையில் இருந்தால் உறவுகள் நிலைத்திருக்கும். கொடுக்கல், வாங்கல் என்பது இங்கு பண விஷயத்தை மட்டும் குறிப்பதல்ல. மதிப்பு, மரியாதையையும் சேர்த்துதான். எல்லா விதமான உறவுகளும் நீடித்து  நிலைத்திருக்க உணர்வு ரீதியான ஒரு தேவை அவசியம்.

சில சமயம் சிக்கல்கள், பிரச்னைகள் உண்டாகும்போது, ‘இந்த உறவு நமக்குத் தேவை தானா?’ என்று யோசிக்க ஆரம்பித்தால் ஒரு உறவும் தேறாது. உறவுகளால் நமக்கு சந்தோஷம், பாதுகாப்பு போன்றவை ஏற்படுகின்றன. மன பயத்தை போக்குவதற்கு உறவு தேவைப்படுகிறது. நம்மைச் சுற்றி இவ்வளவு உறவுகள் உள்ளன என்ற எண்ணமே நமக்கு மன பலத்தை, தைரியத்தை கொடுத்து விடும். எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

எப்போதுமே அன்பு மட்டுமே உறவு நிலைகளை உருவாக்குவதில்லை. விட்டுக்கொடுக்கும் குணமும், புரிதலும் உறவுகள் நீடித்திருக்க ரொம்பவே அவசியம். ஒருவரை ஒருவர் நேசிப்பது, சங்கடமான தருணங்களில் கை கொடுப்பது, ஆதரவாக இருப்பது, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உறவுகளை நீடிக்க வைப்பது நம் கையில்தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடையை இதமாக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி மோர்!
Happy relationships

சமூகத்தில் எப்பொழுதுமே ஒருவருடன் ஒருவர் இசைந்து போவது என்பது ஒரு அழகான நிலையாகும். இவ்வுலகத்தில் தனியாகத்தான் பிறந்தோம், தனியாகத்தான் போகப்போகிறோம். ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஒருவருக்கொருவர் இசைந்துபோவது என்பது மிகவும் அவசியமானதாகும். பிரச்னைகள் இல்லாத உறவே இல்லை. இருப்பினும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிரச்னைகளை பெரிதுபடுத்தாமல் வாழப் பழக வேண்டும்.

உறவினர்கள் என்றாலே வெறுக்கும் சிலருக்கு நாமும் யாரோ ஒருவருக்கு உறவினர்தான் என்ற புரிதல் ஏன் இல்லை. பொதுவாக, எந்த உறவினர் நம் வீட்டுக்கு வந்தாலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத் தவறக் கூடாது. கணவன் வீட்டு உறவினர்கள் வந்தாலும் சரி, நம் வீட்டு உறவினர்கள் வந்தாலும் சரி  பாரபட்சமின்றி மதிக்க வேண்டும். உறவினர்களைப் பற்றி அவர்கள் முதுகுக்குப் பின்னால் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள்தான் இல்லையே என்று தரக்குறைவாக பேசி, அது அவர்கள் காதுக்குச் சென்றால் மிகவும் வருத்தமடைவதுடன், அவர்களுடனான உறவும் பாதிக்கப்படும்.

ஆண்டுக்கு ஒரு நாள் குறிப்பிட்ட தேதியில் ஓரிடத்தில் கெட் டு கெதர் ஏற்பாடு செய்யலாம். இவையெல்லாம் நம் உறவை பலப்படுத்தும்.செய்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com