டென்ஷனே போ போ.....

Tension
Tension
Published on

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்... அலுவலகத்துக்கு உள்ளே வந்தால் டென்ஷன்; வீட்டுக்குள்ளே சென்றால் டென்ஷன்; பேருந்து நிலையத்துக்கு சென்றான் டென்ஷன்; ரயில் நிலையத்துக்கு சென்றாலும் டென்ஷன்; டென்ஷன் இல்லாத இடம் எது யோசித்துப் பாருங்கள்... ஒரு இடத்தையும் கூறமுடியாது. 

நம் வாழ்க்கையில் டென்ஷன் என்பது ஒன்றாக கலந்து விட்டது என்று கூட கூறலாம். இதனால் நமக்கு ஆரோக்கிய சீர்கேடுகள் தான் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு சிலர் மட்டுமே டென்ஷனாகாமல் எப்பொழுதும் கூலாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நாம் பொறாமைப்படுவோம்.

டென்ஷனில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நிறைய பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிவிட்டார்கள். நிறைய படித்து பட்டமும் பெற்றுள்ளார்கள். இருந்தாலும் பலருக்கு அலுவலகத்தில் நுழைந்ததும் டென்ஷன் ஆரம்பமாகிவிடுகிறது.

அலுவலகத்தில் டென்ஷன் இன்றி இருக்க சில டிப்ஸ்:- 

*முதலில் உங்களது மேஜையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். முடிந்தவரை அன்றன்றைக்கே பேப்பர்களை ஃபைல் செய்துவிட வேண்டும். இல்லையெனில் வேண்டிய தகவல் அவசரத்திற்குக் கிடைக்காமல் தேடித் தேடி டென்ஷன் உண்டாகும்.

*ஸ்டேப்ளர், குண்டூசி, பென்சில், ஜம்கிளிப் போன்றவை சின்னச் சின்ன விஷயம்தான். ஆனால் சமயத்துக்குக் கிடைக்காமல் எரிச்சல் மூட்டும்! ஆகவே, காலையில் வேலை துவங்கும் முன் இவற்றைத் தயாராக வைத்துக் கொண்டால் எளிதாக இருக்கும்.

*எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று சின்ன கையேட்டில் வரிசைப்பட எழுதிக் கொண்டால் வேலை மறந்து போகாது.

இதையும் படியுங்கள்:
வேலை மட்டுமல்ல; அதைப் பார்க்கும் சூழலும் நன்றாக இருக்க வேண்டும்!
Tension

*அலுவலக சக ஊழியர்களோ, மேலதிகாரிகளோ, யாரிடமாவது எதையாவது பெற்றாலோ, கொடுத்தாலோ, அத்தாட்சியாக கையெழுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னாளில், "எனக்குத் தெரியாது” என்று யாராவது மறுக்க நேர்ந்தால், உதவியாக இருக்கும்.

*கம்ப்யூட்டர் பிரிண்டரில் பேப்பர் உள்ளதா என கவனித்து நிரப்பி வைத்து விட்டால் டென்ஷன் இன்றி வேலை செய்ய முடியும்.

*மொபைல் ஃபோனை சைலன்ட் மோடில் வைக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்காது. உங்களுக்கும் நிம்மதி.

*அவ்வப்போது தண்ணீர் குடித்து, சில நிமிடங்கள் நடந்து, தேநீர் இடைவேளையில் முகம் கழுவி வந்து உட்கார்ந்தால் நாள் முழுக்க ரிலாக்ஸ்டாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com