பழைய தரை துடைப்பானை புதியதாக மாற்ற சில வழிகள்!

MOP
MOP
Published on

பழைய தரை துடைப்பானை புதியதாக மாற்ற நிறைய வழிகள் உள்ளன. அதன் பிரஷ்களை அதாவது துடைக்கும் துணிப் பகுதியை வெந்நீரில் நன்கு ஊற வைத்து கசக்கி அழுக்குகளை போக்கலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது வாளியில் வெந்நீரை எடுத்துக்கொண்டு அவற்றில் துடைப்பானின் (mop) தரை துடைக்கும் பகுதியை அதில் நன்கு ஊற விட வேண்டும். இதன் மூலம் அழுக்குகள் நன்கு இளகிவிடும். பிறகு ஒரு பிரஷ் கொண்டு வட்ட இயக்கத்தில் தேய்க்க தங்கியிருக்கும் அழுக்குகளும், கறைகளும் வெளியேறிவிடும். பிறகு திரும்பவும் வெந்நீரில் சோப்புத்தூள் சேர்த்து அதில் 15 நிமிடங்கள் தரை துடைப்பானை நன்கு ஊற வைக்கவும். பிறகு கையால் நன்றாக கசக்கி தேய்த்து விட அழுக்குகள், கறைகள் மற்றும் அசுத்தங்கள் முழுவதுமாக நீங்கிவிடும். பிறகு வெயிலில் நன்கு காய விட பளிச்சென்று புதியது போல் ஆகிவிடும்.

ஒரு பக்கெட்டில் டெட்டால் சிறிது, பேக்கிங் சோடா, சமையல் உப்பு மற்றும் பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் கிளீனர்( திரவ சோப்) சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு அதில் தரை துடைப்பானை 30 நிமிடங்கள் நன்கு ஊற விடவும். பிறகு நன்கு கசக்கி விட்டு, இரண்டு முறை நீரில் அலசி எடுக்க அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

மற்றொரு எளிய முறை, ஒரு பக்கெட்டில் தேவையான தண்ணீர் எடுத்துக்கொண்டு பிளீச்சிங் பவுடர்

சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். காலையில் இரண்டு முறை நீரில் நன்கு அலசி எடுக்க சுத்தமான அழுக்குகள், கறை எதுவும் இல்லாத துடைப்பான் தயார்.

வினிகர் உண்மையில் ஒரு இயற்கை கிருமி நாசினி. அத்துடன் தரையை சுத்தவும் செய்யவும் பயன்படும். தினமுமே வீட்டை துடைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் அரைக்கப் வினிகரைக் கலந்து துடைக்க துர்நாற்றம் வீசாது. அத்துடன் தரை துடைப்பானும் பளிச்சென்று இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பத்திரமாக தரை இறங்கியது டிராகன் விண்கலம்..!
MOP

தரைத்துடைப்பானை எளிதாக சுத்தம் செய்வதற்கு ஒரு பக்கெட்டில் லிக்விட் சோப், சிறிது வெள்ளை வினிகர் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு அதில் தரை துடைப்பானை வைத்து அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு நன்கு கால்களால் கசக்கி (கை வேண்டாம்) அதாவது தரையில் மாப்பு துணியை வைத்து இரண்டு கால்களாலும் நன்கு துவைத்து, நீரில் அலசி வெயிலில் காய வைக்க அழுக்குகள், பிசுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

முக்கியமாக தினமுமே தரை துடைக்கும் போது தரைத் துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, சிறிது லிக்விட் சோப்பு சேர்த்து துடைக்க தரையும் பளிச்சென்று இருக்கும்; தரை துடைப்பானும் நாற்றமில்லாமல் இருக்கும்.

கடைசியாக ஒரு டிப்ஸ். தரை துடைப்பான்களை நீண்ட நாட்கள் உபயோகித்தால் நாற்றம் அடிக்கத் தான் செய்யும். எனவே நிறைய நாட்கள் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதியதாக ஒன்றை வாங்கி விடுவது நல்லது.

இந்த எளிமையான வழிகளைப் பயன்படுத்தி பழைய தரை துடைப்பான்களை புதியதாக மாற்றி, அதனுடைய செயல்திறனை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com