
இந்தியவின் சுபான்ஸு சுக்லா மற்றும் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரியை சேர்ந்த 4 பேர் ஆக்சியம்-4 விண்வெளி திட்டம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்வு பணிக்காக கடந்த மாதம் சென்றனர். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம், கடந்த 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். உயிரி தொழில்நுட்பம், வேளாண் அறிவியல் உட்பட 60க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். 18 நாட்கள் ஆய்வுக்கு பின், சுபான்ஷு உள்ளிட்ட 4 வீரர்களும் இன்று பூமி புறப்பட்டனர்.
22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடைந்தனர். இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் இருந்தது. இந்த சூழலில், சரியாக பிற்பகல் 3 மணியளவில் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் தரையிறக்கப்பட்டு உள்ளது.