இப்படியும் நடக்குமா?! ஒருவர் உடலில் வேறொருவரின் நினைவுகள்! இதயம் மாறியதும் மாறிய வாழ்க்கை!

Change of heart book and heart transplantation
cellular memory
Published on

நம்முடைய நினைவுகள் மூளையில் மட்டுமே இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், Cellular Memory யின்படி  நம் உடலில் உள்ள எல்லா பாகங்களுக்குள்ளும் நினைவுகள் இருக்கிறது என்று சொல்கிறது. நம் உடலில் உள்ள பாகத்தை வேறு யாருக்காவது மாற்றி வைத்தால், நம்முடைய அந்த நினைவுகள் அவர்களாலும் உணர முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த தலைப்பு கிளெயர் சில்வியா என்னும் நபருக்கு நடந்த நிகழ்வால் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1988 ல் Claire Sylvia என்ற 47 வயது பெண்மணி, மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்துப்போன ஒரு 18 வயது பையனுடைய இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி வைத்துக் கொள்கிறார். இப்படி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு விசித்திரமான விஷயம் ஒன்று அவருக்கு நடக்கிறது.

அவருக்கு பிரைட் சிக்கன், கிரீன் பெப்பர் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இதெல்லாம் முன்பு அவருக்கு பிடிக்காது. ஆனால், இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு அதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இது எதனால் என்று பார்த்தால் இறந்து போன அந்த பையனுக்கு இந்த உணவுகள் மிகவும் பிடிக்குமாம். அந்த பையனின் இதயம் இவருக்குள் வந்ததால் இவருக்கும் அதெல்லாம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதைப் பற்றி A change of heart என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். 

இதுப்போலவே ஒரு 56 வயது ஆண், இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு வரைய ஆரம்பித்திருக்கிறார். ஏனெனில், அவர் இதயம் யாரிடம் இருந்து வாங்கினாரோ அந்த நபர் ஒரு ஆர்டிஸ்ட்.

இதுப்போன்ற நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதிலே மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய சம்பவம் என்னவென்றால், ஒரு 8 வயது குழந்தைக்கு கொலை செய்யப்பட்ட ஒரு பத்து வயது குழந்தையின் இதயத்தை வைக்கிறார்கள். அதற்கு பிறகு அந்த எட்டு வயது குழந்தைக்கு யாரோ தன்னை வந்து கொலை செய்வதுப்போல கனவுகள் வந்திருக்கிறது. அதற்கு பிறகு போலீஸ் அந்த பத்து வயது குழந்தையை கொலை செய்த கொலையாளியை கண்டுப்பிடிக்கிறார்கள் இந்த குழந்தையின் உதவி மூலமாக!

சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், நம்முடைய நினைவுகள் நம் மூளையில் மட்டும் தங்குவதில்லையாம். நம்முடைய இதயத்தில் கிட்டத்தட்ட 40,000 நியூரான்ஸ் இருக்கிறதாம். நம் மூன்னோர்களின் நினைவுகள் நம் டிஎன்ஏவில் இருக்கிறதாம். நம்முடைய உடல் உறுப்பை இன்னொருவருக்கு கொடுக்கும் போது நம்முடைய ஒரு பார்ட்டை அவர்களுக்கு கொடுக்கிறோம் என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
கொசு கடியில் இருந்து தப்பிக்க இயற்கை பாதுகாப்பு கவசம்!
Change of heart book and heart transplantation

இதை Cellular memory என்று சொல்கிறார்கள். இதற்கு எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது. ஆனால், நிறைய கேஸில் யாரிடம் இருந்து அந்த உறுப்பை வாங்கிறார்களோ அவர்களுடைய குணம் பெறுபவர்களுக்கும் வந்திருக்கிறது. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? நம்முடைய உடலில் நமக்கே தெரியாத இன்னும் எத்தனை அதிசயங்கள் இருக்கிறதோ தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com