சிகைக்காய் செடியின் பண்புகள், சிறப்புகள் மற்றும் நன்மைகள்!

sikaikai specialties
Sikaikai Powder
Published on

சியாவிற்கே தனித்துவம் வாய்ந்த மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு செடி சிகைக்காய் செடியாகும். இதன் தாவரவியல் பெயர் ‘அகேசிகான் சின்னா’ ஆகும். இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இந்த காய்களிலிருந்து உருவாக்கப்படும்  தூள் சிகையை அலசவும், கழுவவும் பயன்பட்டு வருகிறது. ஆகையால் இதை சிகைக்காய் தூள் என அழைக்கிறோம்.

சிகை+காய் இதில் சிகை என்பது முடி, காய் என்பது பழத்தின் இளம் பருவம், முடிக்கான காய் என்று பொருள். இதையே ஆங்கிலத்தில், ‘fruit for the hair’ எனக் கூறுகின்றனர். இந்தியா மற்றும் பண்டைய தமிழ் மரபில் பல நூற்றாண்டுகளாக இயற்கை முடி பராமரிப்பாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சிகைக்காயின் பண்புகள்: இது ஒரு பற்றுக்கொடித் தாவரம். இவை புதர் போன்று வளரும் தன்மை உடையது. இதன் இலை இரட்டை சிறகிலை அமைப்பையும் பூ மஞ்சள் நிறத்திலும், கோளக வடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டித்தது போலவும் காட்சியளிக்கும். இதன் காய்களில் 6 முதல் 10 விதைகள் காணப்படும்.

சிகைக்காயின் சிறப்புகள்:

1. இச்செடியின் சிறப்பே இதன் காய்களால்தான். இதன் காய்களை பொடித்து பெறப்படும் தூளை பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

2. பெரும்பாலான செயற்கை முடிப் பராமரிப்புப் பொருட்களில் இவை கலக்கப் படுகின்றன.

3. சீயக்காய் பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் சரும நோய்களுக்கு சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. மலமிளக்கியாகவும், இருமல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

4.  இதன் மரப்பட்டைகளில் இருந்து ‘சேப்போனின்’ என்னும் பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக்காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதன் இலைகளில் புளித்தன்மை கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்னி தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

5. இதன் காய்களிலிருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியை பாதுகாப்பதற்கும், அதனால் உள்ள நுரைக்கும் தன்மை முடியை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது

நன்மைகள்:

1. சிகைக்காய் பயன்படுத்தும்போது அது பூஞ்சை, காளான் பண்புகளை கொண்டிருப்பதால் பொடுகைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

2. கூந்தலின் அழுக்கை நீக்கி இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. சிகைக்காயில் PHயின் அளவு குறைவாக இருப்பதால் உச்சந்தலையில் மிதமான மென்மையை அளித்து மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. முடி உதிர்வதை கட்டுப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களாகிய வைட்டமின் ‘டி’ மற்றும் 'சி' அடங்கி உள்ளது. மேலும் கரு கரு கூந்தலை சுத்தமாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
கலோஞ்ஜியுடன் தேன் சேர்த்து உண்ணும்போது கிடைக்கும் 5 ஆரோக்கிய  நன்மைகள்!
sikaikai specialties

3. சிகைக்காய் இயற்கை கண்டிஷனராக செயல்பட்டு கூந்தலின் வறட்சியைத் தடுக்கிறது.

4. இது கூந்தல் சிக்கலை கட்டுப்படுத்துவதோடு, பேன் தொல்லையையும் கட்டுப்படுத்துகிறது.

5. தலை முடியின்  இயற்கை நிறமான கருமையை தக்கவைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் விதம்: சிகைக்காயை ஷாம்புவாகவும் தயாரித்து பயன்படுத்தலாம். சிகைக்காய் ஹேர் பேக் போடலாம். சிகைக்காயை அரிசி வடித்த கஞ்சியில் சேர்த்து  தேய்த்தால் முடி பட்டுப்போல் இருக்கும். கண்டிஷனர் இல்லாமலே பளபளவென்று இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com