Health Benefits of Kalonji
Kalonji, Honey

கலோஞ்ஜியுடன் தேன் சேர்த்து உண்ணும்போது கிடைக்கும் 5 ஆரோக்கிய  நன்மைகள்!

Published on

சுத்தமான தேன் என்பது, ஒருசில மகரந்தத் துகள்கள் தவிர்த்து, வேறு எந்தக் கலப்படமும் இல்லாத, மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் இயற்கை உணவு. இதை பலவித நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. தேனை சுவைக்காக பழத் தூண்டுகளின் மீது ஊற்றியும், இஞ்சி ஜூஸ், லெமன் ஜூஸ், துளசிச் சாறு ஆகியவற்றுடன் கலந்தும் உண்ணலாம். ஒவ்வொரு வகை உணவோடு சேரும்போதும் வெவ்வேறு வகை நன்மைகளை உடலுக்குத் தரக்கூடியது தேன். தேனை கலோஞ்ஜி (Kalonji) எனப்படும் கருஞ்சீரகத்துடன் சேர்த்து உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கலோஞ்ஜியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தேன் ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இவை இரண்டையும் சேர்த்து உண்ணும்போது உடலுக்குள் நோய்க் கிருமிகள் நுழைவதைத் தடுக்க முடியும். உடலை நோய் இல்லாமல் பாதுகாக்கவும் முடியும்.

2. கலோஞ்ஜி மற்றும் ஹனி, இரண்டுமே பல காலமாக அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்க உபயோகப்படுத்தப்பட்டு வருபவை. கலோஞ்ஜி விதைகள் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவும். தேனில் உள்ள பிரீபயோட்டிக் குணமானது வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

3. கலோஞ்ஜியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் உள்ளது. இது தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணத்துடன் இணைந்து செயலாற்றும்போது  ஆர்த்ரைடிஸ் போன்ற நோய் உள்ளவர்களின் வீக்கங்களைக் குறைத்து அவர்களின் வலி குறைய உதவி புரியும்.

இதையும் படியுங்கள்:
சுடோகு புதிரை தீர்ப்பதன் நன்மைகள் பற்றி தெரியுமா?
Health Benefits of Kalonji

4. கலோஞ்ஜி விதைகளை நம் முன்னோர்கள், நூறாண்டு காலமாக, மூச்சுப் பாதையில் உண்டாகும் பிரச்னைகளைத் தீர்க்க உபயோகப்படுத்தி வந்துள்ளனர். தேன் தொண்டை அழற்சி மற்றும் இருமலைக் குணப்படுத்தி தொண்டைக்கு இதமளிக்கக் கூடியது. இவை இரண்டையும் சேர்த்து உபயோகிக்கும்போது, மூச்சுக்குழாய் அழற்சியினால் உண்டாகும் புரோங்கிட்டீஸ் (Bronchitis) போன்ற நோயும் குணமாகும்.

5. இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் கலோஞ்ஜி விதைகள் உதவும். தேனில் இனிப்புச் சத்து உள்ளதால் தேனை குறைந்த அளவில் சேர்த்து உட் கொண்டு எதிர்பார்க்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

கருஞ்சீரகத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு அனைவரும் மேற்கூறிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாமே!

logo
Kalki Online
kalkionline.com