மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

Bathroom
Bathroom
Published on

பெரும்பாலானோர், பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? பாத்ரூம் என்றால், குளிப்பதற்கு, துவைப்பதற்கு மட்டுமில்லை! அதற்கு பின்னால் ரகசியம் இருப்பதாக ஆய்வு ஒன்று விளக்குகிறது.

நாம் அனைவரும் பிஸியான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில், அதிகமானோர் அமைதியை தான் விரும்புகின்றனர். அதாவது வேலைபளு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை குறைக்க அமைதியான இடங்களை தேடுகின்றனர். அத்தகைய இடங்களில் ஒன்றுதான் பாத்ரூம். கேட்பதற்கு வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை.

பொதுவாகவே பாத்ரூமை குளிப்பதற்கு, துவைப்பதற்கு என நம்முடைய அத்தியாவாசிய தேவைகளுக்காக பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஆய்வு ஒன்று, பாத்ரூம் மக்களுக்கு மன அமைதி மற்றும் ஓய்வை கொடுப்பதாக கூறுகிறது.

ஆய்வு கூறுவது என்ன?

வில்லேராய் & போச் அன்னோ என்ற நிறுவனம்  நடத்திய ஆய்வு ஒன்றில், 2000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 43% பேர் குளியலறையில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறியுள்ளனர். ஏனென்றால் அங்கு ஓரளவு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் இருந்து, அவர்கள் வாரத்திற்கு சராசரியாக 1 மணிநேரம் 54 நிமிடங்கள் அல்லது மாதத்திற்கு ஒரு வேலை நாள் குளியலறையில் செலவிடுவாதாக தெரியவந்துள்ளது.

எல்லா வயதினரும் குளியலறையில் அதிக நேரம் செலவிடுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் பெண்களை விட ஆண்கள் சற்று அதிக நேரம் செலவிடுவதாக கணித்துள்ளது. சிறுவர்கள் வாரத்திற்கு சராசரியாக 2 மணிநேரம் அல்லது ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் குளியலறையில் செலவிடுவதாகவும் பெண்கள் குளியலறையில் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்கு மேல் செலவிடுவதாகவும் (வாரத்திற்கு 1 மணி நேரம் 54 நிமிடங்கள்) கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆண்களை விட பெண்கள் அதிகமாக தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
Bathroom

இவ்வாறு மன அமைதிக்காகவும், ஓய்விற்க்காகவும் தான் குளியலறையில் அதிக நேரம் செலவிடுவதாக, இந்த ஆய்வு கூறிக்கிறது. இதற்கு முந்தய ஆய்வு, கழிப்பறையில் கைபேசி பயன்பாடும், நேர அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறியுள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக நேரம் ஒதுக்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி உறுப்பினர் ஜார்ஜினா ஸ்டர்மர் கூட தனது கருத்தை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "மக்கள் குளியலறையை எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரு இஷ்டமான இடமாக நினைக்கிறார்கள். வாழ்க்கை மிக வேகமாகவும், பதட்டமாகவும் இருக்கும் இந்தக் காலத்தில், மக்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க ஏதாவது தேவை. குளியலறை அதற்கு ஒரு நல்ல இடம். குளியலறையில் சிறிது நேரம் செலவிடுவது தவறு என்று யாரும் நினைக்க வேண்டாம். நீண்ட நேரம் குளியலறையில் இருந்தும் ஓய்வு கிடைக்காததாக உணர்ந்தால், நீங்கள்  மூச்சுப் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். ஐந்து விரல் சுவாசப் பயிற்சியில் உங்களை நீங்களே நம்பத் தொடங்குவீர்கள்" என அவர் கூறியுள்ளார். 

உங்களுக்கும் பாத்ரூம் அமைதியையும் ஓய்வையும் தருகிறதா? என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.....

குறிப்பு: டென்ஷனை குறைப்பதற்கு குளியலறையில் அதிக நேரம் செலவிடுவது ok என்றாலும், கழிப்பறையில் செல்போன் பயன்பாட்டினை தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com